ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் கடன் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!!


தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு வெளியாகியிருக்கும் முக்கிய அறிவிப்பு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. 


பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இந்த தொழில் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ மூலம் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தனிநபர் கடன். பெண்கள்/ஆண்களுக்கான சுயஉதவி குழு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 


டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு ரூ.3 கோடி கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


சென்னை 


தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு ரூ.10 கோடி கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


டாப்செட்கோ/ டாம்கோ கடன் உதவி திட்டங்களின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைய ஏதுவாக கீழ்கண்ட அட்டவணைப்படி லோன் மேளா சென்னையில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு,


  • சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, வண்ணாரப்பேட்டை  08.07.2025 (மாலை 4 மணி)
  • சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, பிரதான கிளை (பிரகாசம் சாலை,பிராட்வே) - 15.07.2025 (மாலை 4 மணி)
  • சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, ராயபுரம் - 22.07.2025 (மாலை 4 மணி)
  • சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, தண்டையார்பேட்டை- 29.07.2025 (மாலை 4 மணி)
  • சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, பெரம்பூர் - 05.08.2025 (மாலை 4 மணி)
  • சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, M.K.B நகர் - 12.08.2025 (மாலை 4 மணி)
  • சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, திரு.வி.க நகர் -19.08.2025 (மாலை 4 மணி)
  • சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, M.R. நகர் (கொடுங்கையூர்) - 28.08.2025 (மாலை 4 மணி)


எனவே, டாப்செட்கோ/ டாம்கோ கடன் உதவி திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும், சென்னை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மக்கள் / கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் உரிய ஆவணங்களுடன் மேற்படி லோன் மேளா நடைபெறும் முகாம்களில் அணுகி, விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, கடன் உதவி பெற்று பயனடையுமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தூத்துக்குடி 


பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.


விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். 


தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் / வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7% மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை 8%. 


கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை. குழுக் கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் / வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 25.00 இலட்சம் வரையும், ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. 


கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். 


ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரு பாலருக்கான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7%. திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.in.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.


எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து கடனுதவிகள் பெற்று பொருளாதாரத்தை மேம்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும் படிக்க....


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உளுந்து விதை பண்ணை ஆய்வு!!


ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் 100% மானியத்தில் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள்!!


விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் - 100% மானியம், உடனே விண்ணப்பிக்கவும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post