தென்னை இயற்கை விவசாயிகள் குழுவிற்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்கோப் சான்றிதழ்!!



தென்னை இயற்கை விவசாயிகள் குழுவிற்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்கோப் சான்றிதழ்!!


அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுவிற்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்கோப் சான்றிதழ்  வழங்கிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உத்தரவாத சான்றளிப்பு திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளாக உயிர்ம வேளாண்மையில் அத்திவெட்டி கிராமத்தில் 26 விவசாயிகள் கொண்ட குழுவினர் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். 


உயிர்ம வேளாண்மை செய்யும் விவசாயிகளின் வயல்கள் விதைச் சான்றளிப்பு  மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறையின் மூலம் விதைச் சான்று அலுவலர் சங்கீதா அவர்களால் உரிய கால இடைவெளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. 


விவசாயிகள் வாரியாக அவர்கள் பயன்படுத்திய இடுபொருள்களின் விவரம் மண் மற்றும் நீர் பரிசோதனைகளின் அடிப்படையில் தற்காலிக இயற்கை வேளாண்மை சான்றிதழ். ஸ்கோப்சான்றிதழ் என்ற பெயரில் வருட இறுதியில் அத்திவெட்டி தென்னை விவசாயிகள் குழுவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 


தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தென்னை இயற்கை விவசாயிகள் குழுவுக்கு இரண்டாம் ஆண்டிற்கான ஸ்கோப் சான்றிதழ் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்களால் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழு தலைவர் வைரவ மூர்த்தி அவர்களுக்கு குழு சார்பில் வழங்கப்பட்டது. 


வேளாண் துணை இயக்குனர்  மாலதி தென்னந்தோப்புகளில் தட்டைப்பயிறு வளர்ப்பதன் மூலம் ரூகோஸ் வெள்ளைஈக்கள் பொறிவண்டுகளால் எவ்வாறு இயற்கை முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது என்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். 





பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு தமிழக முதல்வர் இயற்கை வேளாண்மை தொடர்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் பாரம்பரிய சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் மூலம் வீட்டு காய்கறி தோட்டங்கள் மற்றும் ஊட்டச்சத்துள்ள பயறு வகைவிதைகளை தொகுப்பாக 100% மானியத்தில் வழங்கி ஊக்கப்படுத்துவது பற்றியும் ஏக்கருக்கு ரூபாய் 4000 வீதம் இயற்கை உரங்கள் இயற்கை பூச்சிக்கொல்லிகள் மற்றும் மீன் அமினோ அமிலம் உற்பத்தி செய்வதற்கு  ஊக்கத்தொகை வழங்கி வருவது பற்றியும் எடுத்துக் கூறி விவசாயிகளை ஊக்கப்படுத்தினார். 


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் சரவணன் மற்றும்சிரமேல் குடி வேளாண்மை உதவி அலுவலர் சுரேஷ் மற்றும் ஜெரால்ட் செய்து இருந்தனர். அத்திவெட்டி இயற்கை விவசாயிகள் குழு தலைவர் வைரவ மூர்த்தி நன்றி கூறினார்


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க....


ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் 100% மானியத்தில் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள்!!


மன்னங்காடு கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த விவசாயிகள் பயிற்சி!!


பட்டுக்கோட்டையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட துவக்க விழா!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments