7.5% இடஒதுக்கீட்டில் தொழிற்கல்வி சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும்!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!


முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விச் செலவினை அரசே ஏற்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்தார்.


சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 7.5 சதவிகித சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்குத் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 50 மாணவர்களுக்கு வழங்கினார்



இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதாவது:


அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழில் கல்வியில் சேர்வதற்காக 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.


போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் நமக்கு இடம் கிடைக்குமா அதுவும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற ஏக்கம் சில மாதங்களுக்கு முன்பு வரை உங்களுக்கு இருந்திருக்கும். அந்த ஏக்கம் மறைந்து, ஏற்றம் பிறக்கும் நாள் தான் இந்த நாள் என்பதை நினைவுப்படுத்தவிரும்புகிறேன்.


திராவிட இயக்கத்தின் நோக்கமே அனைவர்க்கும் கல்வி, அனைவர்க்கும் அவர் தகுதிக்கேற்ற வேலை தரப்பட வேண்டும் என்பது தான். ஆட்சியைப் பிடித்தபிறகு அந்த நோக்கத்தை நிறைவேற்றும் காரியங்களையே அதிகம் செய்தும் வருகிறது, நிறைவேற்றியும் வருகிறது என்பது உங்களுக்கு தெரியும்.



தமிழகத்தின் இளைய சக்தி அனைத்தும் உயர் கல்வியை அடைந்ததாக மாற்றுவது தான் இந்த அரசின் உயரிய இலக்கு ஆகும்.


பெற்றோர்களின் நம்பிக்கையைக் காப்பவர்களாக நீங்கள் உங்களை இன்னும் சிறப்பாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு, அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


வேலை தேடுபவர்களாக மட்டுமல்ல, வேலைகொடுப்பவர்களாகவும் உயர வேண்டும்.அதற்காக உங்களை முழுமையான திறமைசாலிகளாக, பன்முக ஆற்றல் உள்ளவர்களாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.


இத்தகைய அழியாத அறிவுச் செல்வமானதுஅனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். அரசு பள்ளிகளில் படிப்பவர்களில் 69 சதவிகிதம் பேர் கிராமப்புறமாணவர்கள் தான்


அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறக் கல்வியின் மேம்பாட்டுத் திட்டமாக இது அமைந்துள்ளது. அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், 75% இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய இந்த அரசால் கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்பட்டது.



அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள்,நகராட்சிப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்திருத்தப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் மற்றும் அரசுதுறைகளினால் நிர்வகிக்கப்படும் பிற பள்ளிகளில் முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறுகிறார்கள்.


நடப்பு கல்வி ஆண்டில், இந்த சிறப்பு உள் ஒதுக்கீட்டு மூலம் பொறியியல் படிப்புகளில் சுமார் 10,000 அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். அதேபோல, அரசு பள்ளிகளில் பயின்ற சுமார் 350 மாணவர்கள் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் சட்டப் படிப்புகளிலும் பயன்பெறுவார்கள் என்பதையும் நான் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த மாணவர்கள் மூலமாக, அவர்களது குடும்பமும், அவர்களது ஊரும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. இதன் மூலமாக அவர்களது தலைமுறை தலைநிமிர்ந்து நிற்கப் போகிறது. அதன் மூலமாக இந்த மாநிலம் பயனடையப் போகிறது. இப்படிப்பட்ட நிலையில்உங்களுக்கு கல்வி ஆணை வழங்குவதை நான் எனக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்


நாட்டுக்கு பெருமை ஏற்படுத்தித் தருபவர்களாக நீங்கள் வளருங்கள்! வாழுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கல்வி ஆணையைக் கொடுத்து ஒரு தலைமுறையை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதன் மூலமாக கிடைக்கும் பெருமை என்பது மிகப் பெரியது.



பள்ளிக் கல்வித் துறையாக இருந்தாலும் உயர்கல்வித் துறையாக இருந்தாலும் இதன் மூலமாக தமிழ்ச் சமுதாயம் முழுமையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும், உயர்கல்வித் துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன்


அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், ஏன் கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிடுகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


மேலும் படிக்க....


தரமான நெல் விதை உற்பத்தி செய்திட கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள்!!


பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நெல், மக்காச்சோளம், பருத்திக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!!


40 ஆயிரம் ரூபாயில் உருளைக்கிழங்கு தோண்டுவதை எளிதாக்க மிக குறைந்த விலை விவசாய இயந்திரம்!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post