தரமான நெல் விதை உற்பத்தி செய்திட, விதை உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள்!!
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தேவையான விதை நெல் உற்பத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் 75 சதவீதமும் நாகை மாவட்டத்தில் 25 சதவீதமும் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் விதை நெல் உற்பத்தியினை மேற்கொண்டுள்ளனர். விதை உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட விதி முறைகளின்படி மேற்கொள்ள வேண்டும். விதை உற்பத்தி செய்திட விதைச்சான்று துறையின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விதையே
விளைச்சலுக்கு ஆதாரம், எனவே அனைத்து விவசாயிகளும் தரமான விதையினை வாங்கிட விரும்புவர்.
எனவே விதை உற்பத்தியாளர்கள் மற்றும் சாகுபடி செய்யும் விவசாயிகள், தரமான விதைகளை உற்பத்தி
செய்து அளித்தல் அவசியம்.
விதை உற்பத்தியின்
போது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்
வரிசை நடவு
அல்லது செம்மை நெல் சாகுபடி முறையினை பின்பற்றி நடவு செய்திட வேண்டும். தூர் கட்டும்
பருவத்திற்கு முன் நீரினை வடித்திட வேண்டும், தூர் கட்டும் பருவம் முதல், முறையாக நீர்
பராமரித்திட வேண்டும். பு+க்கும் மற்றும் பால்பிடிக்கும் சமயத்தில் நீர் தட்டுப்பாடு
கண்டிப்பாக இருக்கக் கூடாது.
களைகளை கையினாலோ அல்லது கோனோவீடர் கருவி பயன்படுத்தி நட்ட 30-35 நாட்களுக்குள் எடுப்பது அவசியம். மண் பரிசோதனைப்படி உரமிடுதல் வேண்டும் அல்லது பொது பரிந்துரைப்படி தூர்கட்டும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் பால்பிடிக்கும் சமயத்தில் பிரித்து இடுதல் வேண்டும்.
கலவன் அகற்றுதல்
கலவன் அகற்றுதல்
பணி விதை உற்பத்தியின் போது மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டிய பணி. பூக்கும் முன்
: அதிக உயரம் மற்றும் மிகவும் குட்டையான செடிகளை நீக்குதல் வேண்டும்.
பூக்கும் தருனத்தில்:
முன்னதாக பூக்கும் செடிகள், காலதாமதமாக பூக்கும் செடிகள், மீசைநெல் மற்றும் சிகப்பு
பொட்டு நெல் ஆகிய செடிகளை நீக்குதல் வேண்டும். அறுவடைக்கு முன்பு: விதைப்பயிர் மணியின்
பருமனுக்கு ஒத்து பார்த்து அதைவிட பருமனாகவோ அல்லது சன்னமாகவோ உள்ளவற்றை நீக்க வேண்டும்.
குறிப்பிட்ட
நெல் இரகத்தின் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டு தெரிகிற எல்லா தூர்களையும், களை செடிகளையும்
மற்றும் நோய் வாய்ப்பட்ட பயிர்களையும் நீக்க வேண்டும். கலவன் செடிகளை வேரோடு களைந்தெறிய
வேண்டும்.
பூக்கும் போது
தொடர்ந்து 2 முதல் 3 முறை அதிகாலையில் கலவன்களை அகற்றும் பணியினை மேற்கொண்டால், கலவன்களை
எளிதில் கண்டறிய முடியும்.
பொன்னிரமாக
மாறிய பிறகு அறுவடை
90 சத விதைகள்
பொன்னிரமாக மாறிய பிறகு அறுவடை மேற்கொள்ளலாம், அறுவடையின் போது, மணிகளின் ஈரப்பதம்
15 முதல் 20 சதத்திற்குள் இருத்தல் வேண்டும்.
அறுவடை முடிந்த உடன் விதைகளை உடனடியாக உலர்த்துதல் அவசியம். உலர்த்தும் போது களத்தில் வேறு நெல் விதைகள் இருக்கக் கூடாது. காலை 8-12 மணி வரையிலும், மாலை 3 -5 மணி வரையிலும் வெய்யிலில் உலர்த்த வேண்டும்.
உலர்த்தும் போது அடிக்கடி கிளறி விட வேண்டும். விதை நெல்லை 13 சதவீத ஈரப்பத்திற்கு
கீழ் உலர்த்தி, பதர்கள் மற்றும் பயிரின் பாகங்களை நீக்கி சுத்தம் செய்து, புதிய சாக்குகளில்
நிரப்பி சுத்தி நிலையத்திற்கு அனுப்பிட வேண்டும்.
எனவே விதை நெல்
உற்பத்தி செய்யும் விவசாயிகள் தரமான விதை நெல் உற்பத்தி செய்திட மேற்கூறிய தொழில்நுட்பங்களை
தவறாமல் கடைபிடித்து, விதை நெல் உற்பத்தி செய்து அளித்து, தாங்களும் பயனடைந்து, இதர
விவசாயிகளும் பயனடைந்திட உதவிடுமாறு நாகப்பட்டினம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று
உதவி இயக்குநர் இர.சுதா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
இயற்கை முறை வேளாண்மைக்கு ஏற்ற மண்ணை தயாரிப்பது எப்படி?
40 ஆயிரம் ரூபாயில் உருளைக்கிழங்கு தோண்டுவதை எளிதாக்க மிக குறைந்த விலை விவசாய இயந்திரம்!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...