இயற்கை முறை
வேளாண்மைக்கு ஏற்ற மண்ணை தயாரிப்பது எப்படி?
சேலம் மாவட்டம்,
மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், ம.மலர்கொடி,
ஆர்.ஜெகதாம்பாள் மற்றும் செ.சுகன்யா கண்ணா, ஆகியோர் இயற்கை வேளாண்மைக்கு மண்ணை தயாரித்தல்
குறித்து பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.
இயற்கை வேளாண்மை
(organic farming) என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை
வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட
உயிரினம் மற்றும் மனித சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர் சுழற்சி,
பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம்
போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை விவசாய முறையாகும்.
குறைந்த இடுபொருட்களான
மாற்று வழிமுறை
முதல் வருடத்தில்,
ஒரே சமயத்தில் பல்வேறு வயதுடைய பயறு வகை பயிர்களை அதாவது, முதல் 60 நாட்கள் பயிர்,
பின் 90-120 நாட்கள் பயிர், பின்பு 120 நாட்கள் பயிர் ஆகியவற்றை, வரிசையாக பயிரிடலாம்.
தானியங்களை / பச்சைகாய்களை உருவி எடுத்துவிட்டு, பின் எல்லா செடிகளையும் களைச் செடிகளுடன்
சேர்த்து பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தலாம்.
இரண்டாம் பருவத்தில்
ஒரு ஹெக்டேருக்கு 2.5 டன் என்ற விகிதத்தில் இயற்கை உரத்தினை நிலத்தில் இடவும். பின்பு
தானியங்களுடன் பயறு வகைகளையும் ஒன்றாக, ஊடுபயிர் அல்லது தொடர் பயிராகவோ பயிரிடலாம்.
அறுவடைக்குப்பின் இந்த செடிகளை பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் பாய்ச்சும்
வசதிகள் இருந்தால் வெயில் காலத்தில் வளரும் பயறு வகை பயிரினை, காய்கறிகளுடன் சேர்த்து
பயிரிடலாம். அறுவடைக்கு பின்பு இந்த இரண்டு செடிகளையும் சேர்த்து பசுந்தாழ் உரமாகப்
பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு பயிரிடும்
தருணத்திலும் திரவ உரத்தினை வயல்களில் 3-4 முறை இடவும்.
அதிக இடுபொருட்களுக்கான
மாற்று முறை
மண்ணில்
2.5 டன் தொழுஉரம் அல்லது மண்புழு உரம், 500 கிலோ எண்ணெய் பிண்ணாக்கு, 500 கிலோ ராக்பாஸ்பேட்,
100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 5 கிலோபாஸ்போபேக்டிரியா உயிர் உரம் போன்றவற்றை
இடவும்.
3-4 வகையான
வேறு பட்ட பயிர்களை வரிசையாக விதைக்கவும். இதில் 40 சதவிகிதம் பயறு வகைகளாக இருக்க
வேண்டும். அறுவடைக்குப் பின் அடுத்த விதைப்புக்கு முன் எல்லா செடிகளையும் பசுந்தாழ்
உரமாக பயன்படுத்தவும். இரண்டாம் விதைப்பு பருவத்திலும் இதே போன்று உரங்களை பயன்படுத்தவும்.
திரவ உரத்தினை
ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவுக்கு 3-4 முறை பயிரிடும் தருணத்தில் நீருடன் கலந்து
வயல்களுக்குப் பாய்ச்சவும்.
12- 18 மதங்களுக்குப் பிறகு இந்த மண் இயற்கை முறை வேளாண்மைக்கு எந்த பயிர்களையும் இணைத்து பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அடுத்த 2 – 3 வருடங்களுக்கு எந்த பயிரிடுடனும் பயறு வகைப் பயிர்களை ஊடுபயிராகவோ அல்லது இணைப் பயிராகவோ பயிரிடலாம்.
பயறுவகைப் பயிர்களுக்கு குறைந்தது
30 சதவிகிதம் வரை பயிர் கழிவுகளாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு இப்பயிர்
கழிவுகளுடன் திரவ உரத்தினை சேர்த்து அடி உரமாக மண்ணில் இடலாம்.
பல வகையான பயிர்களை
பயிரிடுவதால் அல்லது சுழற்சி முறையில் பயிரிடுதல்
இயற்கை முறை
வேளாண்மையில், ஒரு தனிப்பட்ட பயிர் பயிரிடும் முறை பயன்படுத்தமாட்டாது.
முழுப்பண்ணையிலும்
8-10 பயிர்கள் எல்லா சமயத்திலும் கண்டிப்பாக பயிரடப்பட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு வயலிலும்
குறைந்தது 2-4 வகையிலான பயிர்கள் பயிரிடப்பட்டிருக்க வேண்டும். அவற்றுள் ஒன்று கட்டாயமாக
பயறு வகை தாவரமாக இருக்கவேண்டும்.
சிலசமயத்தில்
ஒரு வயலில் ஒரு விதமான பயிர் மட்டுமே பயிரிடப்பட்டு இருப்பின், அடுத்த வயலில் வெவ்வேறு
விதமான பயிர்களை பயிரிட வேண்டும்.
மூன்று அல்லது
நான்கு வருட பயிற்சுழற்சி முறையினை பின்பற்ற வேண்டும்.
அதிக சத்துக்கள்
தேவைப்படும் தாவரத்திற்கு முதலில் பயிரிட்டு பின்பு பயறு வகை பயிர்களை பயிரிட வேண்டும்.
பல்வேறு விதமான
தாவரங்களைப் பயிரிடுவதற்கும், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும், 50 – 150 காய்கறி
செடிகளை தோராயமாக வீட்டு உபயோகத்திற்காகவும், துளுக்க சாமந்தி செடிகளை, நூறு செடிகள்
ஒரு ஏக்கருக்கு என்றவிகிதத்திலும்பயிரிடவேண்டும்.
உயிருள்ள அதிக
சத்து மிகுந்த இயற்கை மண்
வளமுள்ள, உயிர்
சத்து மிகுந்த மண்ணில் கரிம கார்பனின் அளவு, குறைந்தது 0.8 – 1.5% சதவிகிதம் இருக்க
வேண்டும்.
நுண்ணிய தாவரங்கள்
மற்றும் விலங்கினங்களின் உபயோகத்திற்காக எந்த சமயத்திலும் போதுமான அளவு உலர்ந்த, பாதி
மக்கிய அல்லது முழுவதும் மக்கிய கரிமப் பொருள் மண்ணில் இருக்க வேண்டும்.
ஒரு கிராம்
மண்ணில் 1 * 108 என்ற எண்ணிக்கையில் நுண்ணுயிர்களான பாக்டிரியா, பூஞ்சை மற்றும் ஆக்டினோமைசிட்டிஸ்
போன்றவை கட்டாயமாக இருக்க வேண்டும்.
சிறிய உயிரினங்களுக்கும்,
பூச்சிகளும், எறும்புகளும் கட்டாயமாக போதுமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும். மண்ணில்
உரமிடுதல் மற்றும் மண்ணை வளப்படுத்துதல்.
கிளைரிடியா
மற்றும் இதர வரப்புகளிலும் வளர்த்தப்பட்ட மரங்களின் கிளைகள், பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட
தொழு உரம், மண்புழு உரம், சாணம் மற்றும் சிறுநீர், பயிர் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி
மண்ணின் சத்தினை அதிகப்படுத்தலாம்.
உயிர் உரங்கள்
மற்றும் அடர்த்தியான உரங்களான தூளாக்கப்பட்ட எண்ணெய் பிண்ணாக்குகள், கோழி எரு, காய்கறி
கழிவுகள், மற்ற இதர தயாரிக்கப்பட்ட உரங்களை தகுந்த விகிதத்தில் கலந்து போதுமான அளவுகளில்
உபயோகிக்க வேண்டும்.
அதிக அளவிலான
தொழு உரத்தினை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பயிற் சுழற்சி
முறையினை மாற்றியமைத்தல், பல்வேறு விதமான பயிர்களைப் பயிரிடுதல் போன்ற யுத்திகளைப்
பயன்படுத்தி இடுபொருட்களை நன்றாக உபயோகப்படுத்த வேண்டும்.
மண்ணிலுள்ள
நுண்ணியிரிகள் மற்றும் இதர உயிர்ப் பொருட்களின் செயல்திறனை பராமரிக்க திரவ உரங்களை
மண்ணில் இடுவது அவசியமாகும். எல்லா விதமான பயிர்களுக்கும் 3 – 4 முறை திரவ உரத்தினை
இடலாம்.
மண் புழு உரம்,
கம்போஸ்ட்டீ, மாட்டின் சிறுநீர் போன்றவை தெளிப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் போது பயிர்களின்
வளர்ச்சியினை அதிகரிக்கும் தன்மையுடையவை. பயிரினை விதைத்து 25 – 30 நாட்கள் கழித்து,
3 – 5 முறை இவற்றை தெளிப்பதால் பயிர் உற்பத்தி அதிகரிக்கும்.
வெரிமிவாஷ்,
பசுமாட்டு சிறுநீர் மற்றும் இயற்கை எருக்களின் கரைசல் ஆகியவை மண்ணின் உயிரினங்கள் வளர
பெரிதும் உதவுகிறது. விதைத்த 25 – 30 நாட்கள் கழித்து, 3 – 5 முறை இவற்றை தெளித்தல்
அதிக விளைச்சலை கொடுக்கும்.
இயற்கை முறை
வேளாண் மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த செயல் முறையாகும். எல்லா அம்சங்களும் ஒன்றிணைக்கப்பட்ட,
தனியாக செயல்படும் திறன் வாய்ந்தவை. ஒரு தனிப்பயிர் ஒரு சமயத்தில் வளர்க்கப்படாததால்,
ஒரு பயிருக்கான சத்து மேலாண்மையினை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகும்.
சத்து மேலாண்மை
முறையின் ஒரு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை பூச்சி
விரட்டிகளைப் பயன்படுத்துதல்
செயற்கை உரங்களைப்
பயன்படுத்தும் போது நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் எவை
என்று பாராமல் அனைத்தையும் அழித்து விடும். இயற்கைப்பூச்சி விரட்டிகள் தீமை செய்யும்
பூச்சிகளை விரட்டும் பண்புடையது.
மேலும் விவரங்களுக்கு,
திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636 203
0427 242 2550, 70109 00282, 90955 13102.
மேலும் படிக்க....
40 ஆயிரம் ரூபாயில் உருளைக்கிழங்கு தோண்டுவதை எளிதாக்க மிக குறைந்த விலை விவசாய இயந்திரம்!
கரும்பு சாகுபடியில் புதிய முயற்சியாக கரும்பு நாற்று நடவு இயந்திரம் அறிமுகம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...