நெய்பயிரில்
நீர் சிக்கனம் செய்து லாபகரமான விவசாயம் செய்ய எளிய டிப்ஸ்!!
நெற்பயிரில்
சிக்கனமாக நீர்பாய்ச்சும் நுட்பத்தைத் தெரிந்துகொண்டால், அதிக மகசூல் பெறுவது
எளிதில் சாத்தியம் என வேளாண் நிபுணர்கள்
ஆலோசனை வழங்கியுள்ளனர்.
லாபகரமான
விவசாயம் மேற்கொள்ளுதல்
நெற்பயிருக்கு
1150 முதல் 1200 மி.மீ நீர்
தேவைப்படும். அதை விட அதிகமாக
நீர் பாய்ச்சினால் ஆவியாகும், மண்ணில் ஊடுருவிச் செல்லும். எனவே சிக்கனமாக நீர்
பாய்ச்சி அதிக மகசூல் பெறுவதே
லாபமான விவசாயத்திற்கு அடிப்படை.
நீர்
நிர்வாகம் செய்வது எப்படி?
1. விதைத்த
18-24 மணி நேரத்திற்குள் தண்ணீரை வடித்து விதை முளைக்க வழி
செய்ய வேண்டும்.
2. குண்டு
குழிகளில் தேங்கி நிற்காதவாறு பாத்தி அமைப்பு இருக்க வேண்டும்.
3. விதைத்த
மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீர் கட்டுவது,
தண்ணீர் தேங்காதவாறு இருக்க வேண்டும்.
4. ஐந்தாவது
நாளிலிருந்து நாற்றின் வளர்ச்சிக்கேற்ப நீரின் உயரத்தை அதிகரிக்கலாம். அதிக பட்சமாக ஒரு
அங்குல ஆழ நீர் கட்டுவது
சிறந்தது.
வயல்
நீர் நிர்வாகம் செய்வது எப்படி?
1. சேற்று
உழவும், உழுத நிலத்தை சமன்
செய்வதும் நீரின் தேவையைக் குறைக்கின்றன.
2. இரும்புச்
சக்கரக் கலப்பை மூலம் சேற்றுழவு செய்யும்போது நீர் மண்ணினுள் ஊடுருவி
வீணாவது 20 சதவீதம் தடுக்கப்படுகிறது.
3. வயலில்
மடக்கி உழப்பட்ட பசுந்தாள் உரம் நல்ல முறையில்
மட்குவதற்கு ஒரு அங்குலம் அளவுக்கு
நீர் நிறுத்தப்படவேண்டும்.
4. குறைவான
நார்த்தன்மையுடைய சணப்பை, தக்கைப்பூண்டுக்கு 7 நாட்களும் அதிக நார்த்தன்மையுடைய கொளுஞ்சிக்கு
15 நாட்களும் நீர்தேவை. அதன்பின்பே நடவு செய்யவேண்டும்.
நடவு
செய்யும்போது கடைபிடிக்க வேண்டியவை?
தண்ணீரின்
அளவு சேறும் சகதியுமாய் இருந்தால் தான் சரியான ஆழத்தில்
நடுவதற்கும் அதிக துார் பிடிப்பதற்கும்
உதவும். நட்ட ஒரு வாரத்திற்கு
ஒரு அங்குலம் நீரைத் தேக்கவேண்டும். இது துார் பச்சை
பிடிக்கும் காலம் என்பதால் நீர் அளவு குறையக்கூடாது.கொண்டைக் கதிர் பருவத்திற்கு பின் 2 அங்குலத்திற்கு மேல் ஆழமாக நீர்
பாய்ச்சினால் வேரின் திறன் பாதிக்கப்பட்டு அழுகி விடும்.
கதிர்
சரியாக வெளிவராமலும் வந்த கதிர்களில் நெல்
மணிகள் சரிவர முதிர்ச்சியடையாமலும் வீணாகி விடும். நீர் தேங்கினால் வடிகால் அமைத்து நீர் மறைந்தபின் கட்ட
வேண்டும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பாக கடைசி நீர் கட்ட வேண்டும்.
வயலுக்கு வரப்பு
அமைத்தல்
ஒவ்வொரு
வயலும் 25 முதல் 50 சென்ட் உள்ளதாக அமைக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட வயல்களின் நான்கு புறமும் வரப்பிற்கு உட்புறமாக 30 - 45 செ.மீ. இடைவெளியில்
கை வரப்பு அமைத்து தண்ணீர் தேவையைக் குறைக்க வேண்டும்.
நீர்பிடிப்பு
உள்ள நிலப் பகுதிகளில் வயலின் மத்தியிலும், குறுக்காகவும் 2 அடி ஆழத்திற்கு 1.5 அடி
அகலத்திற்கு வடிகால் அமைக்கலாம்.
மேலும் படிக்க....
சம்பா நெல் சாகுபடி கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள்!
பின்விளைவுகளைத் தடுக்க மீன் அமினோ அமிலம் யூரியாவிற்கு மாற்றாக மீன் அமினோ அமிலம்!!
விவசாயிகளுக்கான 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...