இலவசமாக 100% மானியம் மற்றும் மின் மோட்டார், நீர் குழாய்கள், நீர் சேமிப்புத் தொட்டி அமைக்க மானியம்!!
மாவட்ட அழைப்பு
திருப்பூர்
வட்டாரத்தில் சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க 100 %மானியம் பெற சிறு விவசாயிகள்
விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
அரசு
தரும் மானியம்
சிறு,
குறு விவசாயிகளுக்கு 2 ஏக்கர் பரப்பிலும், இதர விவசாயிகளுக்கு 5 ஏக்கர்
பரப்பிலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க அரசு சார்பில் மானியம்
வழங்கப்படுகிறது.
இதுகுறித்து
திருப்பூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் க.சுவர்ணலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
திருப்பூர்
வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் வட்டாரத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த
58 ஏக்கர் பரப்புக்கு ரூ. 42.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
100% மானியம்
இத்திட்டத்தின்
கீழ் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர
விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
தேவைப்படும்
ஆவணங்கள்
1. சிட்டா
2. அடங்கல்
3. நிலவரைபடம்
4. குடும்ப
அட்டை
5. ஆதார்
அட்டை
6. சிறு,
குறு விவசாயிக்கான சான்றிதழ்
7. 2 பாஸ்போர்ட்
புகைப்படங்கள்
எனவே
சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் திருப்பூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை
அணுகலாம். அங்கு முறைப்படி விண்ணப்பிக்கலாம்.
எவ்வளவு
மானியம்?
இதில்
சிறு, குறு விவசாயிகளுக்கு 2 ஏக்கர்
பரப்பிலும், இதர விவசாயிகளுக்கு 5 ஏக்கர்
பரப்பிலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
நுண்ணீர்
பாசன கருவிகளை அமைத்து 7 ஆண்டுகள் நிறைவுபெற்ற விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் புதியதாக விண்ணப்பிக்கலாம்.
மேலும்
நடப்பு ஆண்டு துணை நீர் மேலாண்மை
செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட இனங்களுக்கு
மானியம் வழங்கப்படவுள்ளது.
மின்
மோட்டார் அல்லது டீசல் என்ஜின் அமைக்க ரூ. 15 ஆயிரம், ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நீர் கொண்டு வரும்
குழாய்கள் அமைக்க ரூ. 10 ஆயிரம், நீர் சேமிப்புத் தொட்டிகள்
அமைக்க ரூ. 40 ஆயிரம் மானியமாக வழங்கப்படவுள்ளது.
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
முன்பதிவு
இத்திட்டத்தின்கீழ்
பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களது நிலங்களில் சொட்டு நீர்ப்பாசனக் கருவிகள் அமைத்த பிறகு இத்திட்டத்துக்கான மானியத்தை பெறலாம்.
கூடுதல்
விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
இது
தொடர்பான கூடுதல் விவரங்களுக்குத் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரை
97918-91288 அல்லது தோட்டக்கலை அலுவலரை 95788-44874 ஆகிய செல்போன் எண்களில்
தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் உழவை எளிதாக்கும் டாப் 4 விவசாய இயந்திரங்கள்!
மாடுகளில் மீட்டு இனப்பெருக்கம் ஓர் கண்ணோட்டம்!! மீட்டு இனப்பெருக்கத்தின் காரணங்கள்!!
விவசாயிகளுக்கு ஒரு பெரிய பரிசு!! பிரதமர் மோடி விவசாயிகளுக்கு 35 வகையான சிறப்பு பயிர்கள் பரிசு!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...