தமிழக அரசு பெண்களுக்கு இலவச கோழி வழங்கும் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விளக்கம்!!


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் தமிழக அரசு வழங்க கூடிய பெண்களுக்கான இலவச கோழி வழக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது எப்படி மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.


இந்தத் திட்டம் முற்றிலும் பெண்களுக்கு மட்டுமே உள்ள திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் இதற்கு முன்பாக தமிழகத்தில் பல மாவட்டத்தில் உள்ள பெண்கள் பயனடைந்து வருகிறார்கள் தமிழக அரசால் அறிவித்துள்ள இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?



இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன?


1. ஆதார் அட்டை (Aadhar card)


2. ரேஷன் அட்டை (Ration Card)


3. வருமான சான்றிதழ் (Income Certificate)


4. ஜாதி சான்றிதழ் (community Certificate)


5. வங்கி கணக்கு விபரங்கள் (Bank Details)


6. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (Passport Size Photo)



இந்த ஆவணங்கள் மட்டும் இருந்தால் போதும் இந்தத் திட்டத்தில் அனைத்து பெண்களும் என்ன வைக்கலாம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கீழே உள்ள விண்ணப்பத்தை தவறு இல்லாமல் பூர்த்திசெய்து அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் கொடுத்து விண்ணப்பிக்கலாம் அல்லது கால்நடை ஆய்வாளரிடம் கொடுக்கலாம். இந்தத் திட்டம் நேரில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.


முன்னுரிமை


இந்தத் திட்டத்தில் முன்னுரிமை என்பது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு 30% சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் முன்னுரிமை என்ற பிரிவில் (திருநங்கை/ கணவரால் கைவிடப்பட்டவர்/விதவை) இதனை மறக்காமல் பூர்த்தி செய்ய வேண்டும்.


இந்த திட்ட பயன்கள்


இந்தத் திட்டத்தின் கீழ் 20 – 25 நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். மேலும் இந்த நாட்டு கோழிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் கால்நடை மருத்துவர் மூலமாகவே வழங்கப்படும்.



விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறை


மேலே உள்ள ஆவணத்தில் தவறு இல்லாமல் பெயர்,தந்தை பெயர்,கைபேசி எண்,ஆதார் எண்,குடும்ப எண்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றால் அதற்கான எண்,உங்க வீட்டு முகவரி,ஊராட்சி ஒன்றியம் பெயர்,குடும்ப உறுப்பினர் விபரம்,முன்னுரிமை கோரும் சிறப்பு பிரிவினராக இருந்தால் அதற்கு உண்டான சான்றிதல் எண் அனைத்தையும் தவறு இல்லாமல் எழுதி உங்களுடைய கையொப்பம் இட வேண்டும்.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


குடும்பத்தின் வருமானம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு முன்னதாக தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்ட கோழி ஆடு கரவை மாடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து அதன் மூலம் பயனடைந்து இருக்கிறீர்களா போன்ற கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவும்.


இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய இந்த அருமையான திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


தமிழகத்தில் இந்தத் திட்டத்தை பற்றி பெண்களுக்கு அதிகமாக தெரியாததால் நீங்கள் உங்கள் சுற்று வட்டாரத்திற்கு இந்த பதிவை பகிரவும்.


விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய........ Click to Download PDF


மேலும் படிக்க....


இலவசமாக 100% மானியம் மற்றும் மின் மோட்டார், நீர் குழாய்கள், நீர் சேமிப்புத் தொட்டி அமைக்க மானியம்!!


விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் உழவை எளிதாக்கும் டாப் 4 விவசாய இயந்திரங்கள்!


கால்நடைகளில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள்!! ஓட்டுண்ணிகள் வராமல் தடுக்க பொதுவான பண்ணை பராமரிப்பு முறைகள்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் Time to Tips Family

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post