தமிழகத்தில்
சம்பா பயிரால் பாதிக்கப்பட்ட 8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி இழப்பீடு!
தமிழகத்தில்
சம்பா பயிரால் பாதிக்கப்பட்ட, 8 லட்சம் விவசாயிகளுக்கு, 1,600 கோடி ரூபாய் விரைவில்
இழப்பீடாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடி
தமிழகத்தில் கடந்த 2020 அக்டோபர் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை, சம்பா பருவ நெல் சாகுபடி மட்டுமின்றி, பல்வேறு பயிர் சாகுபடியும் நடந்தது.கொரோனா ஊரடங்கு காலத்திலும், விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்தனர்.
சோதனை மேல்
சோதனை
ஆனால் கொரோனாவுக்குப்
போட்டியாக டிசம்பர் மாதம் வீசிய, 'நிவர்' மற்றும், புரெவி புயல்களால், 15 மாவட்டங்களில்
பயிர் சேதம் ஏற்பட்டது.
பருவம் தவறிய
மழை
அதுமட்டுமா?
வேதனை, இதையடுத்து, ஜனவரியில் அறுவடை நேரத்தில், பருவம் தவறிப் பெய்த மழையாலும், பல
மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது.
மொத்தமாக,
25 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. பயிர் பாதித்த விவசாயிகளுக்கு இடுபொருள்
நிவாரணமாக, 1,715 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு பெற்று தரும் பணிகளை, வேளாண்துறையினர் மேற்கொண்டனர்.
ரூ.1,600 கோடி
பயிர் இழப்பீடு
தற்போது,
1,600 கோடி ரூபாயை, பயிர் இழப்பீடாக வழங்கக் காப்பீட்டு நிறுவனங்கள் முன்வந்து உள்ளன.
மாநிலம் முழுதும், 8 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
முதல்வர் கையால்
நிவாரணம்
வழக்கமாக, பயிர்
இழப்பீடு நிவாரணம், நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படும்.
இந்தமுறை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையால் நிவாரணம் வழங்க, வேளாண் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.
தேதி இன்னும்
முடிவாகாததால் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் படிக்க....
விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் சிறுதானிய பயறு விதைகள் வேளாண்துறை அறிவிப்பு!!
PM Kisan Tractor Yojana: விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கு அரசு 50% மானியம்! தவறவிடாதீர்கள்!!
Kisan Credit Card கடன் திட்டம் புதிய மேம்படுத்தல்: திட்டத்தின் புதிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...