புதியதாக சம்பா
பருவ நெல் சாகுபடி பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவிப்பு!!
மாவட்ட நிர்வாக
அறிவிப்பு
புதுக்கோட்டை
மாவட்டம் திருமயம் வட்டார விவசாயிகள், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு காப்பீடு செய்து
பயன்பெறுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை உதவி இயக்குநர்
உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
சம்பா சாகுபடி
புதுக்கோட்டை
மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா
பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிர் காப்பீட்டு
திட்டம்
திருமயம் வட்டார
விவசாயிகளுக்கு இந்த ஆண்டு, எதிர்பாராமல் ஏற்படும் சேதங்களுக்கு, இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும்,
அவர்களுடையப் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின்
பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இழப்பீடு எதற்கெல்லாம்
கிடைக்கும்
மேலும் பருவம்
தவறிப் பெய்யும் மழை, கடும் வறட்சி மற்றும் அதிகப்படியான பெரும் மழையினால் ஏற்படும்
இழப்பினை இத்திட்டத்தின் மூலம் ஈடுகட்ட முடியும். இவ்வாண்டு சம்பா நெல் பயிருக்கு ஏக்கருக்கு
காப்பீட்டுத் தொகை ரூ.31000/மும், விவசாயிகள் பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.465/மும்-
செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு
விண்ணப்ப மையங்கள்
ஆகவே விவசாயிகள்
அனைவரும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்
மற்றும் பொது சேவை மையங்களில் பயிர் காப்பீட்டுத் தொகையினை செலுத்தி காப்பீடு செய்யலாம்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
தேவைப்படும்
ஆவணங்கள்
1. பட்டா
2. சிட்டா
3. அடங்கல்
4. ஆதார் அட்டை
நகல்
5. வங்கிக்கணக்குப்
புத்தகத்தின் நகல்
6. முன்மொழிவுப்
படிவம்
மேற்கூறிய இந்த
ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைத்து, பயிர் காப்பீட்டிற்காகப் பதிவு செய்ய வேண்டும்.
பயிர் காப்பீடு
செய்ய காலக்கெடு
நெற் பயிர்
காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி கடைசி நாள் ஆகும். ஆகவே கடைசிநாள் வரை காத்திராமல்
உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
ஏதேனும் சந்தேகம்
இருந்தால், உதவிக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை அணுகிப் பயன் பெறலாம். இவ்வாறு
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
தமிழகத்தில் சம்பா பயிரால் பாதிக்கப்பட்ட 8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி இழப்பீடு!
விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் சிறுதானிய பயறு விதைகள் வேளாண்துறை அறிவிப்பு!!
குறுவை நெல்லைப் பாதுகாக்க- 50% மானியத்தில் தார்பாய்கள்! வேளாண்துறை அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் Time to Tips Family
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...