PMFBY பிரதமர் பயிர் காப்பீடு 33 மாவட்டங்களுக்கான பயிர் காப்பீடு செய்வதற்கான விபரங்கள்! வேளாண்துறை அறிவிப்பு!!
நெல்லுக்கானப்
பயிர் காப்பீடு-நவ. 15ம் தேதி வரைக் காலக்கெடு
பிரதமரின் பயிர்
காப்பீட்டு திட்டத்தில் நெல்லுக்குப் பயிர் காப்பீடு செய்ய இன்னும் சில தினங்களே காலக்கெடு
விதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
பிரதமரின் பயிர்க்
காப்பீடு
கணக்கில்லாமல்
கொட்டித் தீர்த்து வரும் மழையால், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிர்கள் தண்ணீரில்
மூழ்கி நாசமாயின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய இயற்கை
சீற்றங்களின்போது ஏற்படும் இழப்பில் இருந்து விவசாயிகள் தப்பித்துக்கொள்ள ஏதுவாக, பயிர்க்காப்பீட்டுத்
திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வேளாண்துறைச் செயலர் சமயமூர்த்தி
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
6.91 லட்சம்
ஏக்கர்
பிரதம மந்திரி
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள
நெற்பயிரை, முழு வீச்சில் காப்பீடு செய்து வருகின்றனர். இதுவரை, 5.65 லட்சம் விவசாயிகள்
பதிவு செய்து, 6.91 லட்சம் ஏக்கர் பயிர் பரப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சம்பா பருவத்தில்
27 மாவட்ட அறிவிப்புகள்
தஞ்சாவூர்,
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர்,
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார்.
திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், சிவகங்கை, கடலுார்,
திருவள்ளூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், சம்பா பருவத்தில், நெல் பயிரை காப்பீடு செய்வதற்கு
நவம்பர் 15ம் தேதி கடைசி நாள்.
சம்பா பருவத்தில்
27 மாவட்ட அறிவிப்புகள்
கன்னியாகுமரி,
அரியலுார், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை
பொறுத்தவரை, டிச., 15 கடைசி நாள்.
நெல் பயிர்
சேதமடைய வாய்ப்பு
வடகிழக்கு பருவ
மழையால் நெல் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது.எனவே, இத்திட்டத்தின் கீழ், இதுவரை பதிவு
செய்யாத விவசாயிகள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை
மையங்கள் வழியாக உடனடியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயிர்க் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள்
1. முன்மொழிவு
விண்ணப்பம்.
2. பதிவு விண்ணப்பம்.
3. அடங்கல்.
4. விதைப்பு அறிக்கை.
5. வங்கி கணக்கு
புத்தக நகல்.
6. ஆதார் அட்டை
நகல்.
ஆகியவற்றுடன்,
பயிர் காப்பீட்டு தொகையில், 15 சதவீதத் தொகையை, விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
இதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் தகவலுக்கு
தொடர்புகொள்ள
எனவே, விவசாயிகள்
கடைசி தேதி வரை காத்திருக்காமல், முன்னதாகவே தங்கள் நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை
அலுவலரை அணுகலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க....
PM KISAN 10 வது தவணை RS.2,000/- இந்த மாதமே வெளியீடு தவணை பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...