பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அனைத்து வகையான பயிர்களுக்கும் காப்பீடு செய்ய கடைசி தேதி விபரங்கள்!!

 


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அனைத்து வகையான பயிர்களுக்கும் காப்பீடு செய்ய கடைசி தேதி விபரங்கள்!!


2021-2022 ராபி பருவத்தில் மக்காச்சோளம் சிறுதானியங்கள் பயறு வகைகள் பருத்தி எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் உடனடியாக காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2016 பருவம் முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



விருதுநகர் மாவட்டத்தில் 2021-22 ம் ஆண்டின் நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு 15.11.2021 எனவும் மக்காச்சோளம் கம்பு ராகி துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு 30.11.2021 சோளம் பயிருக்கு 15.12.2021; எனவும் 


நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 31.12.2021; எனவும் எள் பயிருக்கு 31.01.2022 எனவும் மற்றும் கரும்பிற்கு 31.08.2022 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் கொத்தமல்லி பயிருக்கு 15.12.2021 எனவும் மிளகாய் பயிருக்கு 31.12.2021 எனவும் வெங்காயம் மற்றும் வாழை பயிர்களுக்கு 31.01.2022 எனவும் தெரிவிக்கப்படுகிறது.


விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.



எனவே விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும் பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


எனவே, விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல், முன்னதாகவே தங்கள் நெற்பயிரை காப்பீடு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலரை அணுகலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க....


பிரதமர் பயிர் காப்பீடு 33 மாவட்டங்களுக்கான பயிர் காப்பீடு செய்வதற்கான விபரங்கள்! வேளாண்துறை அறிவிப்பு!!


அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!!


மழையால் பயிர் பாதித்த பயிர்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்! வேளாண்துறை அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments