தமிழகத்துக்கு நாளை ஆபத்து! உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!

 


தமிழகத்துக்கு நாளை ஆபத்து! உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி முதல் தொடங்கியது.  சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.


வங்கக் கடலின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அது இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது. காலை 8.30 மணியளவில் அது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இருந்தது.



இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்தது. பின்னர் வலுவடைந்த நிலையிலேயே மேற்கு-வடமேற்கு திசை நோக்கி செல்கிறது.


இது இன்று பிற்பகலில் இருந்து தமிழகத்தின் கடலோர பகுதியை நோக்கி செல்லும். இன்று இரவு தமிழகத்தின் கடலோர பகுதிக்கு அருகில் வந்து சேரும். நாளை வட தமிழக கடற்கரையை அடைந்துவிடும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு- வட மேற்கு திசை நோக்கி செல்லும்.


நாளை மாலை கடலூர் அருகே காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்துக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட் என 3 வகையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.


நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு இன்று ‘ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யும்.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய இன்னும் பல மாவட்டங்களுக்கு நாளை பலத்த மழையை தரும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.


இதன்படி இந்த மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.

 


டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் பலத்த மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.


மேலும் படிக்க....


அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!!


வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!! டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவு அதிகரிப்பு!!


மழையால் பயிர் பாதித்த பயிர்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்! வேளாண்துறை அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments