அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!
தென்கிழக்கு
வங்கக்கடலில் அதிதீவிர காற்றழுத்தப்பகுதி உருவாக உள்ளதால், தமிழ்நாட்டில் மீண்டும்
மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் மழை
வடகிழக்கு பருவமழை
காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த
ஒரு வாரமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக இடைவிடாது
மழை பெய்து வருகிறது.
சென்னை நகரில்
அதிகபட்சமாக சாந்தோம் பகுதியில் 23 செ.மீட்டர் மழை பெய்தது. இதேபோல பல இடங்களிலும்
20 செ.மீட்டருக்கு மேல் மழை கொட்டியது.
மிதக்கும் சென்னை
இதேபோல சென்னையை
ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால் சென்னை நகருக்குள் தாழ்வானப் பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலைகள் தற்காலிக சாலைகளாக மாறி, ஆறுபோலக் காட்சியளிக்கின்றன.
பெரும் வெள்ள
நினைவுகள்
2015-ம் ஆண்டு
சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் நகரின் தற்போதைய வெள்ள
நிலைமை இருக்கிறது. நகரை சுற்றியுள்ள புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம்
ஏரி, கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரி ஆகியவை நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதன் காரணமாகவும்
பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.சென்னையில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.எனவே வெள்ள
நிலைமை இதைவிட மோசமாகலாம் என்ற அச்சம் நிலவுகிறது.வளிமண்டல சுழற்சி காரணமாகத்தான் தொடர்ச்சியாக
மழை பெய்து வந்தது.
இந்தநிலையில்
தென்கிழக்கு வங்கக்கடலில் அதிதீவிர காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக இருப்பதாக வானிலை
மையம் அறிவித்துள்ளது.அவ்வாறு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானால் அதன் மூலம் மிக அதிக
மழை பெய்வது வழக்கம். காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவாகி புயலாக மாறுவதும் உண்டு.
அவ்வாறு மாறினால் பயங்கர சூறைக்காற்றுடன் மழை பெய்யும்.
சென்னையை நெருங்கும்
தென்கிழக்கு
வங்கக்கடலில் அதிதீவிர காற்றழுத்தப்பகுதி உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால்
தமிழ்நாட்டில் மீண்டும் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர்
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும். வருகிற 11-ந் தேதி சென்னையை
அது நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை நெருங்கி வரும்போது நகரில் மிக
அதிக மழை பெய்யும்.
5 நாட்களுக்கு
எனவே சென்னை
நகரம் மீண்டும் வெள்ளக்காடாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி
உருவாவதால் தமிழ்நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மிக கன மழை பெய்யும் வாய்ப்பு
உள்ளது. இதன் காரணமாக சென்னையில் தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்துக்கு இடைவிடாது மழை
பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க....
மழை பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்ககோரி பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும்
விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து
விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது
வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப்
குழு சேர் GROUP
1 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
2 Time to Tips Family.
வாட்சப்
குழு சேர் GROUP
3 Time to Tips Family.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...