ஒரு ஏக்கருக்கு, 6,000 ரூபாய் மதிப்புடைய இலவச இடுபொருள் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

 


ஒரு ஏக்கருக்கு, 6,000 ரூபாய் மதிப்புடைய இலவச இடுபொருள் - விவசாயிகளுக்கு அழைப்பு!!


திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த காய்கறி விவசாயிகளுக்கு முழு மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.6,000 மதிப்புள்ள இடுபொருட்கள்


உடுமலை வட்டத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 6,000 ரூபாய் மதிப்புள்ள இடுபொருட்கள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. 



இதுதொடர்பாக, மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,


காய்கறி பயிர்கள் சாகுபடி


மடத்துக்குளம் தாலுகா பகுதியில், தக்காளி, வெங்காயம், மிளகாய், பூசணி, தர்ப்பூசணி, கத்தரி, வெண்டை, முருங்கை மற்றும் பந்தல் காய்கறிகளான பாகல், புடலை, பீர்க்கன் ஆகிய காய்கறி பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன.


எனவே காய்கறி பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்காக நடைமுறைப் படுத்தியுள்ளது.



2021-22ம் ஆண்டிற்கு இடுபொருட்கள்


நடப்பு 2021-22ம் ஆண்டிற்கு, ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் வாயிலாக, காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 6,000 ரூபாய் மதிப்புள்ள இடுபொருட்கள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.


தற்போது காய்கறி பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.


தேவைப்படும் ஆவணங்கள்


1. அடங்கல்


2. சிட்டா


3. உரிமைச்சான்று


4. ரேஷன் கார்டு


5. ஆதார் அட்டை


 6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2


முன்னுரிமை


விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று, மேலேக் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அரசின் வேளாண் நலத்திட்டங்களில் இதுவரைப் பயனடையாத விவசாயிகளுக்கு, முன்னுரிமை அளித்து மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மொத்தம், 75 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படுகிறது.ஆதிதிராவிட விவசாயிகளுக்கு, 20 ஏக்கருக்கும், இதர விவசாயிகளுக்கு 55 ஏக்கருக்கும், 4.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடுபொருள் வழங்கப்படுகிறது.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


தொடர்புக்கு


பயன்பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு, உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் தாமோதரன் - 96598 38787, பிரபாகரன் - 75388 77132 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க....


விவசாயிகளே...!! நீர் பாசனக் குழாய்கள் வாங்க ரூ.15,000 மானியம் அரசு அறிவிப்பு!!


புதிய மின் மோட்டார் வாங்க விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!!


பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா PMKSY: ரூ.93,068 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு நலத்திட்டம்!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments