உரம் தட்டுப்பாட்டால் டெல்டா விவசாயிகள்.. கவலை: கூடுதல் விலை கொடுத்து வாங்கும் அவலம்!!



உரம் தட்டுப்பாட்டால் டெல்டா விவசாயிகள்.. கவலை: கூடுதல் விலை கொடுத்து வாங்கும் அவலம்!!


காட்டுமன்னார்கோவில்-காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதிகளில் யூரியா, பொட்டாஷ் உரம் கடும் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



கடலுார் மாவட்ட டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், புவனகிரி மற்றும் பரங்கிப் பேட்டை வட்டாரத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 


தற்போது, நெற்பயிர்கள் 70 முதல் 80 நாட்கள் கொண்டதாக உள்ளன. விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு அடி உரமாக டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ் பயன்படுத்துகின்றனர். தற்போது மேல் உரமாக யூரியா மற்றும் பொட்டாஷ் இட வேண்டிய காலம். ஆனால் யூரியா, பொட்டாஷ் உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



இதனால், மாவட்டம் கடந்து சென்று கூடுதல் விலை கொடுத்து உரம் வாங்க வேண்டிய அவல நிலைக்கு டெல்டா பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மாவட்ட தரக்கட்டுப்பாடு துறை மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை, உர நிறுவனங்களில் இருந்து வாங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், விற்பனை அங்கீகாரம் பெற்ற உரக்கடைகளுக்கு வழங்குகிறது. யூரியா ரூ, 270, பொட்டாஷ் ரூ. 1000 என, அரசு நிர்ணயித்த விலையில் விற்க வேண்டும். 


ஆனால், உரக்கடை கள்ள மார்க்கெட்டில் யூரியா ரூ. 300 முதல் ரூ. 400 வரையிலும், பொட்டாஷ் ரூ. 1,100 முதல் ரூ. 1,200 அளவில் விற்கப்படுகிறது.காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி டெல்டா பகுதிக்கு காரீப் பருவம் குறுவை சாகுபடிக்கு யூரியா 9,180 டன், டி.ஏ.பி 1,036 டன், காம்ப்ளக்ஸ் 5,581 டன், பொட்டாஷ் 346 டன். ராபீ பருவம் எனப்படும் சம்பா சாகுபடிக்கு யூரியா 10,899 டன், டி.ஏ.பி 1,561 டன், காம்ப்ளக்ஸ் உரம் 11,776 டன், பொட்டாஷ் 1,759 டன் ஒதுக்கீடு செய்து வழங்கப்படுகிறது.


இதில் நவம்பர் வரை யூரியா 6,200 டன்னும், பொட்டாஷ் 1,200 டன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இரு உரங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யூரியா, பொட்டாஷ் உரம் கிடைக்காமல் விவசாயிகள் வயல்களுக்கு உரம் போடாமல் இருப்பதால் மகசூல் குறையுமோ என கவலையடைந்துள்ளனர்.



மேலும், சிலர் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று, கூடுதல் விலை கொடுத்து உரம் வாங்கி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உரத்தட்டுப்பாடு குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'வேளாண் துறை சாகுபடி பரப்பு, பயிர்களுக்கு இட வேண்டிய உரம் அளவுகளை கணக்கிட்டு, அதனை அரசுக்கு பரிந்துரை செய்து, உர நிறுவனங்களில் இருந்து வாங்கி கொடுக்கிறோம். உர நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் உரத்தின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை.


ஆனால் விவசாயிகள் சாகுபடி பயிர்களுக்கு தேவைக்கு அதிக உரங்களை பயன்படுத்துவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது' என்றனர்.விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் படிக்க....


டிசம்பர் 3ம் தேதி உருவாகுகிறது புதிய புயல் 'ஜாவத் புயல்' மீண்டும் கன மழை!!


மழையால் பாதித்த 20,000 ஏக்கர் பயிர்கள்: பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!!


வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம்!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Timeto Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

Post a Comment

0 Comments