கொத்தமல்லி
சாகுபடியில் அதிக விளைச்சல் பெற உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் விதை தரங்கள்!!
தமிழில் கொத்தமல்லி
என அழைக்கப்படும் இது சமஸ்கிருதத்தில் ‘தனியா’ என்றழைக்கப்படுகிறது. இது நோய்களை எதிர்த்து
போராடுவதில் தன்னிகரில்லாதது. எனவே பல நோய்களுக்கு தீர்வாக தனியாகவே பயன்படுத்தலாம்.
தசை எலும்பு, நரம்பு என அனைத்திலுமுள்ள பாதிப்புகளை குணமாக்கும் திறன் இதற்கு உள்ளது.
நல்ல வடிகால் வசதியுள்ள இருமண் பாடான நிலம் இதற்கு ஏற்றது. கீரைக்காக கொத்தமல்லியை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். கீரைகள் 50 முதல் 60 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும்.
தமிழகத்தில் குளிர்காலம் மற்றும் கோடைகாலம் என இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காக சாகுபடி செய்யப்படுகிறது. குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது. மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது.
விதைத்த 30 நாளில் குறுகிய கால பணப்பயிராக கொத்தமல்லி
உள்ளதால் இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாக பயிரிடாமல், 20 செண்டுகளாகப் பிரித்து
15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். கொத்தமல்லி
விதை (தனியா) உற்பத்தி கொத்தமல்லித் தழையை விட கூடுதல் வருவாய் தரும்.
அதிக லாபம்
தரும் கொத்தமல்லி சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் கொத்தமல்லி பயிரில் உள்ள
உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களின் குணாதிசயங்களை அறிந்து, நல்ல ரகத்தினை தேர்வு செய்து,
தரமான விதைகளையும் அறிந்து சிறந்த முறையில் விதைப்பு மேற்கொள்ள வேண்டும்.
கொத்தமல்லி
சாகுபடியில் கோ-1, கோ-2, கோ-3, கோ(சீஆர்) 4, சாதனா, சிந்து சஸ்திரா, சதா, சுவாதி, சுகுணா,
சுருச்சி, கரண். போன்ற ரகங்கள் தமிழகத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
விதைப்பதற்கு
முன் கொத்தமல்லி விதைகளை உள்ளேயுள்ள விதைகளுக்கு சேதாரமில்லாமல் கைகளால் தேய்த்து இரண்டாக
உடைத்து நீரில் 1 நாள் அல்லது 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து பின் 1 சதவீத பொட்டாசியம்
டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் காய வைத்து விதை
நேர்த்தி அதன் பின்பே விதைக்கவேண்டும். அதிக அழுத்தம் கொடுத்தால் விதைகளில் பாதிப்பு
ஏற்பட்டு விதைகள் முளைக்காமலேயே போய்விடும். அதிகம் பேர் செய்யும் தவறு இதுதான்.
விதைகளை விதைப்பதற்கு
முன் கண்டிப்பாக விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். விதைகளை அசோஸ்பயிரில்லம், டிரைக்கோடெர்மா
விரிடி மற்றும் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். பஞ்சகாவ்வியம், அமிர்தகரைசலில்
ஊற வைத்தும் விதைகளை விதைப்பு மேற்கொள்ள வேண்டும். மேலும் மழை நீரில் விதைப்பு மேற்கொள்ள
வேண்டும். மேலும் மழை நீரில் விதைகளை ஊறவைத்து விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.
ஒரு எக்டருக்கு
தேவையான 10-12 கிலோ விதைகளை இரண்டாக உடைத்து விதை நேர்த்தி செய்து, ஊற வைத்து விதைப்பு
மேற்கொள்ள வேண்டும். விதைகள் 8-15 நாட்களுக்குள் முளைத்துவிடும். கொத்தமல்லி பெரும்பாலும்
அதன் தழைகளுக்கு வளர்க்கப்படுவதால் தொழுஉரம், மண்புழு உரம், கம்போஸ்ட் உரங்கள், மற்றும்
இயற்கை உரங்களையேபயன்படுத்த வேண்டும்.
விதைத்த 30ம் நாள் செடிகளைக் கலைத்து இளங்கீரையாகவும், பின்னர் 60 மற்றும் 75வது நாட்களில் 50 சதவீத இலைகளையும் அறுவடை செய்யலாம். சாதாரணமாக 90 முதல் 110 நாட்களில் விதை அறுவடை செய்யப்படுகிறது. கொத்தமல்லியைப் பொறுத்தவரை பயன்படுத்தப்படும் விதைகளுக்கு குறைந்தபட்சம் 65 சதவிகிதம் முளைப்புத்திறனும், 95 சதவீதம் புறத்தூய்மையும் கட்டாயம் இருக்கவேண்டும்.
மேலும் விதைகளில்
5 சதவீதம் மட்டுமே கல், மண், தூசிகள் இருக்கலாம். மேலும் கொத்தமல்லி சாகுபடி செய்யும்
விவசாயிகள் விதை கொத்தமல்லியை கட்டாயம் பரிசோதனை செய்த பிறகே நடவுப் பணியில் ஈடுபட
வேண்டும்.
எனவே, விவசாயிகள்
தங்கள் கையிருப்பில் உள்ள விதை கொத்தமல்லியில் இருந்து 50-100 கிராம் அளவுக்கு விதை
மாதிரி எடுத்து ரூ.30/- பரிசோதனைக் கட்டணத்துடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி
பெரிய மில் தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரியில் செயல்படும் விதைப்பரிசோதனை
நிலையத்தினை அணுகி பயன்பெறலாம்.
இத்தகவலை திருவாரூர்
மாவட்டத்திற்கான தஞ்சை சரக விதைப்பரிசோதனை அலுவலர் து.சிவவீரபாண்டியன், திருவாரூர்
விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ச.கண்ணன் மற்றும் வேளாண்மை அலுவலர் க.புவனேஸ்வரி
ஆகியோர் தெரிவித்துள்ளர்கள். விபரங்களுக்கு 99655 63563 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க....
வானிலை முன் அறிவிப்பு: விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் நிலையம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...