காவிரி பாசன நெல் விவசாயிக்களுக்கு ஓர் வேண்டுகோள்! இலை சுருட்டுப்புழுவின் மேலாண்மை!!



காவிரி பாசன நெல் விவசாயிக்களுக்கு ஓர் வேண்டுகோள்! இலை சுருட்டுப்புழுவின் மேலாண்மை!!


காவிரி பாசன மாவட்டங்க‌ளான, திருச்சி, தஞ்சாவூர், திருவாவூர் ம‌ற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலாக நெல் பயிரிடப்படுகிறது. தற்ப்போது இலை சுருட்டுப்புழு மற்றும் பாக்டீரியா இலைக்கருகல் நோய் மிக அதிகமாக தக்கும் அபாயம் உள்ளது.


இலை சுருட்டுப்புழுவின் தாக்குதலின் அறிகுறிகள்


பச்சையான புழுக்கள், இலைகளை நீள் வாக்கில் மடிக்கத்து/சுருட்டி, பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து காணப்படும். தீவிர தாக்குதல் 50% வரை தானிய மகசூல் இழப்பு ஏற்படும் அந்துப் பூச்சியானது மஞ்சளான பழுப்பு நிற, கருப்பு அலை போன்ற கோடுகள் கொண்ட‌ இறக்கைகளுடன் வயலில் காண்ப்படும்.



இலை சுருட்டுப்புழுவின் மேலாண்மை


1. தேவைக்கு அதிகமாக தொழு உரங்கள் மற்றும் யூரியா இடுவதை தவிர்க்கவும்,


2. லேம்டா சைக்குலோத்ரின் 5 % EC – 1.0 மி / லி அல்லது எமாமெக்டின் பென்ஜொவேட் 5 % 2 கி / லி என்ற அளவில் ஒரு ஹெக்டருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.


பாக்டீரியா இலைக்கருகல் நோய் அறிகுறிகள்


அதிகாலை நேரங்களில் இளம்புள்ளிகளின் மேல் பால் போன்ற அல்லது பனித்துளி போல் திரவம் வடிதல் காணப்படும். இலைப்பரப்பின் மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும் அல்லது இலை நுனிகள் அலை வடிவ ஓரத்துடன் மாறும். நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும் பின் சுருண்டும், 



இலை நடுநரம்பு பழுதடையாமலும் காணப்படும். தீவிர தாக்குதல் ஏற்பட்ட இலைகள் விரைவில் காய்ந்து 60% வரை தானிய மகசூல் இழப்பு ஏற்படும்.


பாக்டீரியா இலைக்கருகல் நோய் மேலாண்மை


1. பிளீச்சிங் பவுடர் (100 கிராம்/லிட்டர், துத்தநாக சல்பேட் (2%) உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.


2. காப்பர் ஆக்சிக்லோரைடு 1.25 கிலோ எக்டர் ஆகியவற்றை கலந்து தெளிக்க வேண்டும். பின் தேவை ஏற்பட்டால், 15 நாட்களுக்குப் பின் ஒருமுறை இக்கலவையைத் தெளிக்கலாம்.


3. ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் + டெட்ராசைக்லின் கலவை 300 கிராம் \ எக்டர் என்ற அளவில் ஒரு ஹெக்டருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.



மேலும் தகவல் அறிய


கூடுதல் விபரங்களுக்கு, முனைவர் செ.சேகர், கு.திருவேங்கடம், பூச்சியியல் துறை, கு.இராமலிங்கம், நோய்யியல் துறை, முனைவர் பூ.ராஜேஸ், உழவியியல் துறை, பயிர் பாதுகாப்பு வல்லுனர்கள் குழு, ஆர்.வி.ஏஸ் வேளாண்மை கல்லூரி, தஞ்சாவூர் தொடர்பு கொள்ளலாம்.

 

மேலும் படிக்க....


தரமான நெல் விதை உற்பத்தி செய்திட கடைப்பிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள்!!


இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்!!


மகிழ்ச்சி செய்தி! விவசாயிகள் எளிதாக ரூ.1.60 லட்சம் கடன் பெற முடியும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments