இயற்கை முறையில்
விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்!!
இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சி கொல்லிகள் இன்றி மேற்கொள்ளப்படும் விவசாயத்துக்கும் அதன் மூலம் விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கும் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என விற்பனை செய்யப்படும் விளைபொருட்களை
வாங்கும் போது அவற்றுக்கான தரச்சான்று இருக்கும் பட்சத்தில் அவற்றின் இயற்கை தன்மை
உறுதி செய்யப்படுகிறது. இச்சூழ்நிலையில் தரச்சான்று என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.
தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குநர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கக சான்றளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அங்கக சான்றளிப்பு மத்திய அரசின் தேசிய
அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின்படி அபீடா (APEDA) நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும்
அங்கீகாரத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
அங்கக சான்றளிப்பு
பணி தனிநபர் பதிவு, குழு பதிவு மற்றும் பெரு வணிக/நிறுவன பதிவு என பல்வேறு நிலைகளில்
மேற்கொள்ளப்படுகிறது. பயிர் உற்பத்தியுடன் கால்நடை பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல்
மற்றும் கையாளுதல், தேனீ வளர்ப்பு மற்றும் வனப்பொருட்கள் சேகரிப்பு செய்வோர்களும் அங்ககச்
சான்றினை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த சான்றிதழைப்
பெறுவதற்கு விண்ணப்பபடிவம் (3 நகல்கள்), பண்ணையின் பொது விபரக் குறிப்பு, பண்ணையின்
வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம் (3 நகல்கள்), துறையுடனான
ஒப்பந்தம் 3 நகல்கள், நிலஆவணம் (சிட்டா), வருமானவரி கணக்கு நிரந்தர அட்டை, ஆதார் நகல்,
2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பதிவு கட்டணம் நேரடியாகவோ அல்லது இணைய வழி ரசீது
ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
பதிவு கட்டணம்
சிறு, குறு விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.2700/-ம், மற்ற விவசாயிகள் ரூ.3200/-ம் செலுத்த
வேண்டும். குழுவாக பதிவு செய்ய ரூ.7200/-ம் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400/-ம் மாவட்ட
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் செலுத்தி ரசீது
பெற்றுக் கொள்ள வேண்டும்.
விவசாயிகள்
அங்கக சான்றளிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு நாகர்கோவில் ஒழுகினவேரி
தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட விதை சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு
உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று கன்னியாகுமரி விதைச்சான்று
மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஷீபா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
நெல் பயிர் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு விவசாயிகள் அறிய வேண்டிய நுண்சத்து பரிந்துரைகள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...