வாழை பயிர் நோய் மேலாண்மை பாதுகாப்பு வழி முறைகள் மற்றும் பயன்கள்! முழு விபரம் இதோ!!
வாழை பயிர் பாதுகாப்பு முறைகள்
கிழங்கு வண்டு
இதனைக் கட்டுப்படுத்த 10 முதல் 20 கிராம் கார்பரில் தண்டுப் பகுதியைச் சுற்றி தூவி மண்ணைக் கிளறிவிடவேண்டும்.
அசுவினி
இதனைக் கட்டுப்படுத்த பாஸ்போமிடான் ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மீத்தைல் டெமட்டான் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தண்டின் மேலிருந்து அடி வரை தெளிக்கவேண்டும். குலை வந்த பிறகு மருந்து செலுத்தக்கூடாது.
சாறுண்ணிகள் மற்றும் கண்ணாடி இறக்கை பூச்சி
எக்டருக்கு மீத்தைல் டெமட்டான் 20 இசி 2 மில்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1 மில்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் ஏதாவது ஒன்றினைத் தெளித்துக் கட்டுப்படுத்தவேண்டும்.
நூற்புழுக்கள்
நடவிற்கு வாழைக்கன்றுகளை நூற்புழுக்கள் தாக்காத இடங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். தாக்கிய இடங்களில் மீண்டும் வாழையைப் பயிரிடாமல் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும்.
வாழைக் கன்றுகளை நடுவதற்குமுன் கிழங்குப்பகுதியில் உள்ள வேர்கள் மற்றும் கருநிறப் பகுதிகளை கத்தியால் நன்கு சீவிவிட்டு, குழைந்த களிமண்ணில் கிழங்கை முக்கி எடுத்து அதன் மீது 40 கிராம் கார்போஃபியூரான் குருணை மருந்தைப் பரவலாகத் தூவி, பின்னர் நடவு செய்ய வேண்டும்.
தண்டுத் துளைக்கும் வண்டு
பக்கக் கன்றுகளை அதிகம் வளரவிடாமல் வெட்டி அகற்றிவிடவேண்டும். வண்டு தாக்கிய மரங்களை சிறு துண்டுகளாக வெட்டி உலர வைத்து பின்பு தீயிட்டு அழிக்கவேண்டும்.
மோனோகுரோட்டோபாஸ் 1.50 மில்லியுடன் 350 மில்லி தண்ணீரை எடுத்துக் கொள்ளவேண்டும். இம்மருந்து கரைசலைத் தண்டின் அடிப்பாகத்திலிருந்து 60 செ.மீ உயரத்தில் சாய்வாகக் கீழே நோக்கி தண்டினுள் ஆழமாகச் செலுத்த வேண்டும்.
இதே போன்று வாழைத் தண்டில் 150 செ.மீ உயரத்தில், கீழே செலுத்திய பக்கத்திற்கு எதிர்புறத்தில் மேலும் 2 மில்லி செலுத்தவேண்டும். மொத்தமாக ஒரு மரத்திற்கு நான்கு மில்லி அளவு மருந்து செலுத்தவேண்டும்.
மரத்தின் 5வது மாதம் முதல் 8வது மாதம் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஊசி மூலம் பூச்சிக்கொல்லி மருந்து போடுவதன் மூலம் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க முடியும்.
சிகடோக்கா இலைப்புள்ளி நோய்
வைரஸ் தாக்கப்பட்ட மரங்களை அழித்து அப்புறப்படுத்த வேண்டும். மானோகுரோட்டோபாஸ் 1 மில்லி மருந்தை 4 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாள் இடைவெளியில் மூன்றாவது மாதத்திலிருந்து ஊசி மூலம் தண்டு பாகத்தில் செலுத்தவேண்டும்.
5 மில்லி பெர்னோக்சான் திரவத்தை ஊசி மூலம் தண்டுக்குள் செலுத்தவேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளை வேரோடு அகற்றிடவேண்டும். குழிகளில் ஒன்று முதல் 2 கிலோ சுண்ணாம்பை இட்டு மண்ணால் மூடி விடவேண்டும்.
கார்பன்டாசிம் 2 கிராம் மருந்தை 100 மில்லி அளவு தண்ணீரில் கரைத்து அதிலிருந்து 3 மில்லி மருந்தை எடுத்து ஊசி மூலம் தண்டுப்பகுதியும், கிழங்கும் சந்திக்கும் பகுதியில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ ஆழத்தில் செலுத்தவேண்டும். இவ்வாறு கன்று நட்ட 3வது மற்றும் 6வது மாதங்களில் செய்யவேண்டும்.
கொட்டை வாழை
2 கிராம் சோடியம் உப்பு 2,4 – டியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். இந்த அளவு 200 தார்களுக்குப் போதுமானது.
அறுவடை
கன்று நட்டு 12 முதல் 15 மாதங்கள் கழித்து அறுவடைக்குத் தயாராகிவிடும். மண், இரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பூ பூத்த 90 முதல் 150 நாட்கள் கழித்து தார்களை அறுவடை செய்யலாம்.
மகசூல்
ஒரு எக்டரில் இருந்து ஒரு வருடத்திற்கு பூவன் 40 முதல் 50 டன், மொந்தன் 30 முதல் 40 டன், ரஸ்தாளி 40 முதல் 50 டன், ரொபஸ்டா 50 முதல் 60 டன், குள்ள வாழை 50 முதல் 60 டன் வரை மகசூல் கிடைக்கும். இரகங்களைப் பொறுத்து மகசூல் மாறுபடும்.
ஊடுபயிர்
வாழையின் ஆரம்ப நிலை வளர்ச்சியின் போது, ஊடு பயிரிடுவது எளிதாகும். வாழையை தொடர்ந்து கத்திரி, கருணை கிழங்கு, மஞ்சள், மிளகாய் முதலியன ஊடு காலநிலையை பொறுத்து பயிரிடப்படுகின்றன.
பயன்கள்
உடல் எடையை
அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து
அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி
கிடைக்கும்.
வாழைப்பூவுக்குத்
தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில்
ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம்.
வாழைப்பழம்
அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம்
உப்பை நீக்கி, உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து
வைக்கிறது.
உடலில் நீர்ச்சத்து
குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது
மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.
உடலில் தேவையற்ற
உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில்
கற்கள் வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது.
வாழை இலையில்
சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது
உடம்பில் சேர்கின்றன. மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால் நமது உணவுக்கு இயற்கையாகவே
கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை இலையில்
உண்ணுவது சிறந்தது.
மேலும் படிக்க....
நெற்பயிரில் எலி மேலாண்மை மற்றும் எலிகளை கட்டுப்படுத்தும் முறை!!
தரமான வாழைக் கன்றுகளை, குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யும் நவீன முறை!!
வாழை இலை மூலம் அதிக வருவாய் வாழை விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...