கத்திரி பயிரைத் தாக்கும் காய்த்துளைப்பான் மற்றும் தண்டுத்துளைப்பான் மேலாண்மை!!
தமிழ்நாட்டில்
கத்திரி சாகுபடி பரவலாக எல்லா மாவட்டத்திலும் செய்யப்படுகிறது. இந்த கத்திரி பயிரைத்
தாக்கும் குருத்து பூச்சியில் மற்றும் காய்த்துளைப்பான், தண்டு துளைப்பான் தாக்குதல்
மிக அதிகமாகவும் பரவலாகவும் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் முறைகளை பார்ப்போம்.
குருத்து
மற்றும் காய்த்துளைப்பான்
இவ்வகையான
புழுவானது கத்திரி செடியின் வளரும் குருத்துக்களையும், காய்களையும் துளைத்துக் கொண்டு
உள்ளே சென்று அங்குள்ள திசுக்களை உண்டு வரும். மேலும் கழிவுகளை துளையின் வழியாக வெளியே
தள்ளும். இதனால் இளம் குருத்துக்கள் வாடிக் காணப்படும். சூடுக்குருத்து காய்ந்துவிடும்.
மேலும் பூ மொக்குகள் அல்லது காய்கள் உதிர்ந்து விடும். இலைகள் வாடிக் காணப்படும்.
கட்டுப்படுத்தும்
முறைகள்
காய்த்துளைப்பான் புழுவால் பாதிக்கப்பட்ட இளம் குருத்துக்கள் மற்றும் நுனித் தண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும். ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக கத்திரி பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். இனக் கவர்ச்சிப் பொறிகளை ஒரு ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
வேப்பக் கொட்டை
வடிநீர் 5 சதவீதம் தெளித்து இப்புழுவை கட்டுப்படுத்தலாம். ஆசாடிராக்டின் 1.0 சதம் நுஊ
3மி,லி) டைமெத்தொயேட் 30சதம் நுஊ (7 மி,10லி) புளுபென்டையமைய்டு 20 (7.5 கி,லி)
தயோடிகார்ப் 75% (2கி,லி) போன்ற பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை நடவு செய்த
ஒரு மாதத்திற்கு பிறகு 15 நாட்கள் இடைவெளியில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
தண்டுத்
துளைப்பான்
தண்டு
துளைப்பான் புழு தாக்கிய இளஞ்செடிகளின் இளங்குருத்து வாடிவதங்கி காணப்படும். இப்புழுவால்
பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சிக் குன்றி காணப்படும். காய் உற்பத்தி பாதிக்கப்படும்.
கட்டுப்படுத்தும்
முறைகள்
தண்டு
துளைப்பான் புழு தாக்குதலால் சேதமடைந்த மற்றும் இறந்த செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
விளக்குப் பொறி அமைத்து பூச்சுகளை சேகரித்து வேப்பம் எண்ணையை (2 மி.லி,லிட்டர்) தெளித்துக்
கட்டுப்படுத்தலாம்.
தகவல் வெளியீடு
முனைவர் த.செந்தில்குமார், உதவிப் பேராசிரியர் (பயிர் நூற்புழுவியல்), முனைவர் கோ.நெல்சன்
நவமணி ராஜ், உதவிப் பேராசிரியர் (விதை நுட்பவியல்) மற்றும் முனைவர் வீ.மு.இந்துமதி,
இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன்,
புதுக்கோட்டை – 622 303.
மேலும்
படிக்க....
2022 பொது பட்ஜெட் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையின் எதிர்பார்ப்புகள்!!
விவசாயத்தில் ட்ரோன்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க 75% மானிய விலையில் ட்ரோன்கள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...