Random Posts

Header Ads

உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்திட அழைப்பு!!

 


உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்திட அழைப்பு!!


தைப்பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்திட புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ரா.ஜெகதீஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ஆகிய உளுந்து இரகங்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. வம்பன் 8 இரகம் 65-70 நாடகள் வயதுடையது. ஏக்கருக்கு சுமார் 350 கிலோ மகசூல் தரவல்லது. இலை சுருட்டு புழு, மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. ஒரே நேரத்தில் பூக்கும் தன்மை உடையது. 



எனவே ஒரே சமயத்தில் காய்கள் முதிர்ச்சி அடையும். அறுவடை நேரத்தில் விதைகள் உதிராத காரணத்தினால் இயந்திர அறுவடைக்கு ஏற்றது. வம்பன் 10 ரபி பருவத்திற்கு எற்றது. மஞ்சள் தேமல் நோய் மட்டுமல்லாது அனைத்து வைரஸ் நோய்களுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்டது. ஏக்கருக்கு சுமார் 450 கிலோ மகசூல் தரக்கூடியது. தற்பொழுது வம்பன் 11 என்ற புதிய இரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ஆடி, புரட்டாசி, தை மற்றும் சித்திரை பட்டங்களுக்கு ஏற்றது. மேலும் மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. உளுந்து பயறு விதை அளவு ஏக்கருக்கு 8 கிலோ, நெல் தரிசாக இருக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 10 கிலோ. விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்து விதைப்பது அவசியமாகும். 



உயிரியல் மருந்து விதை நேர்த்திக்கு, ஒரு கிலோ உளுந்து விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி (அல்லது) 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எதிர் உயிரி பூஞ்சான மருந்து கலந்து 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும்.


நுண்ணுயிர் உர விதைநேர்த்திக்கு தலா ஒரு பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை 200 மி.லி. ஆறிய அரிசிக் வடித்த கஞ்சியுடன் கலந்து அதனுடன் பூஞ்சாண விதைநேர்த்தி செய்த (24 மணி நேரத்திற்கு பின்பு) ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும். 


அல்லது ஒரு கிலோ விதைக்கு 10 மி.லி வீதம் ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளுடன் 80 மி.லி. ரைசோபியம் திரவ நுண்ணுயிரி உரத்துடன் கலந்து விதைநேர்த்தி செய்து 10 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். 



இவ்வாறு செய்வதால் பயிருக்கு தேவையான தழைச்சத்து மற்றும் மணிச்சத்து கிடைத்து பயிர் ஆரோக்கியமாக இருப்பதோடு கூடுதல் மகசூலும் கிடைக்கும்.

 

மேலும் நடப்பு தைப்பட்டத்தில் பயறு விதைப்பண்ணை அமைக்க விருப்பப்படும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ரா.ஜெகதீஸ்வரி கேட்டுக் கொண்டார்.


மேலும் படிக்க....


விவசாயத்தில் ட்ரோன்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க 75% மானிய விலையில் ட்ரோன்கள்!!


மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை பசுமை உரம்! குறைந்த விலையில் விற்பனை செய்யத் திட்டம்!


கத்திரி பயிரைத் தாக்கும் காய்த்துளைப்பான் மற்றும் தண்டுத்துளைப்பான் மேலாண்மை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments