நிலக்கடலை விதைப் பண்ணையில் அதிக மகசூல் அதிக லாபம் பெற தொழில் நுட்ப ஆலோசனை!!
நிலக்கடலை விதைப்பண்ணை அமைத்து அதிக இலாபம் பெறலாம். விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் ஆதார நிலை சான்று விதைகளை பெற்று விதைப்பண்ணை அமைக்கலாம். மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால் நிலக்கடலை இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டு பயிர் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
இதனைத் தவிர்க்க ஒரு கிலோ நிலக்கடலை விதைக்கு உயிர் பூஞ்சாணக் கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். விதைப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக விதை நேர்த்தி செய்வதால் நோய்கள் வராமல் பயிருக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
நிலக்கடலையின் வளர்ச்சியில் வேதி உரங்களின் தேவை அதிகமாக இருப்பதால் மிக குறைந்த விலையில் கிடைக்கும் உயிர் உரங்களை விதையுடன் கலந்து விதைத்தால் உரச்செலவை குறைக்கலாம், மண்ணின் இயல்பையும் பாதுகாக்கலாம்.
எக்டருக்கு தேவையான 125 கிலோ முதல் 160 கிலோ விதைப்பருப்புடன் 600 கிராம் நிலக்கடலை ரைசோபியம் உயிர் உரம் கலந்து விதைப்பதன் மூலம் நைட்ரஜனை பயிர்கள் நிலைப்படுத்தி தழைச்சத்தும் மற்றும் 600 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் கலந்து விதைத்தால் பயிருக்கு தேவையான மணிச்சத்தும் கிடைப்பதால் உர தேவை குறைவதோடு, மண்வளமும் பாதுகாக்கப்படுகின்றது.
விதை
நேர்த்தி செய்யும்பொழுது விதைகள் உரத்துடன் எளிதில் ஒட்டும் வகையில் சாதம் வடித்த கஞ்சியில்
சேர்த்து நிழலில் உலர்த்தியபின் விதைக்க வேண்டும்.
விதைத்த 30 நாட்களுக்குள் அந்தந்த வட்டார வோண்மை உதவி இயக்குநர்களை அணுகி விதைப்பண்ணையை பதிவு செய்வதற்கு ஒரு விதைப்பு அறிக்கை ஒன்றுக்கு கட்டணமாக ரூ.25/-, பரிசோதனை கட்டணமாக ரூ.30/- மற்றும் ஒரு ஏக்கருக்கு வயலாய்வு கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும். விதைச்சான்று அலுவலர்கள் விதைத்த 60 வது நாள் மற்றும் 90வது நாள் என இரு முறை வயலாய்வு செய்வார்கள்.
மூன்றாவதாக 135 நாட்களுக்குள் நிலக்கடலை விதைக்குவியலை ஆய்வு செய்வார்கள். வயல் ஆய்வின்
போது பிற இரக கலவன்கள் ஏதாவது இருந்தால் அதனை அப்புறப்படுத்த சொல்வார்கள். நிலக்கடலை
பயிருக்கு அடியுரமாக ஜிப்சம் ஏக்கருக்கு 80 கிலோ மற்றும் விதைத்த 45வது நாள் மேலுரமாக
80 கிலோ என மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். இதனால் திரட்சியான பொக்கற்ற எண்ணெய்
சத்தள்ள காய்கள் பிடித்து அதிக மகசூல் கிடைக்கும்.
எனவே நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மேற்சொன்ன தொழில் நுட்பங்களை கடைபிடித்து அதிக மகசூல் எடுப்பதோடு, விதைப் பண்ணை அமைத்து நல் விதைகளை உற்பத்தி செய்து அதிக லாபம் அடையலாம் என புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் ரா.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
மேலும்
படிக்க....
2022 பொது பட்ஜெட் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையின் எதிர்பார்ப்புகள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint
WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...