Random Posts

Header Ads

முருங்கை சாகுபடியில் கம்பளிபூச்சி தொல்லையில் இருந்து விடுபட இந்த மருந்துகளை கையாளுங்கள்!!



முருங்கை சாகுபடியில் கம்பளிபூச்சி தொல்லையில் இருந்து விடுபட இந்த மருந்துகளை கையாளுங்கள்!!


முருங்கை அறிவியல் ரீதியாக மோரிங்கா ஒலிஃபெரா என்று அழைக்கப்படுவது, உணவு அல்லாத (முருங்கை எண்ணெய்) மற்றும் உணவு (இலைகள் மற்றும் காய்கள்) பண்டமாக அதன் பல்நோக்கு பண்புகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். 


முருங்கை பயிர் பல பூச்சிகளால் தாக்கப்படுகிறது. பூச்சிகள் மொட்டுப்புழு (நூர்டா மோரிங்கே), ஹேரி கம்பளிப்பூச்சி (யூட்டிரோட் மெல்லிஃபெரா), மற்றும் நெற்று ஈ (கிடோனா டிஸ்ட்டிக்மா) பட்டை கம்பளிப்பூச்சி (இன்டர்பெலா டெட்ரானிஸ்) மற்றும் இலை கம்பளிப்பூச்சி (நூர்டா பிலைட்டலிஸ்). இவற்றில் பெரிய விவசாய இழப்பை ஏற்படுத்தும் ஹேரி கம்பளிப்பூச்சி பற்றி விவாதிப்போம்.

 


கம்பளிப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்


  • மரத்தின் தண்டுப் பகுதியில் புழுக்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து காணப்படும்.


  • புழுக்கள் கூட்டமாக சேர்ந்து சாப்பிடும். மரப்பட்டையை சுரண்டி சாப்பிடும், தழைகளை பல்லால் கரண்டு சாப்பிடும்.


  • தாக்குதல் முற்றிய நிலையில் மரம் இலைகளே இல்லாமல் மொட்டையாகக் காணப்படும்.

 

பூச்சியின் விபரம்


முட்டை: இளம் குருத்து மற்றும் இலைகளில் குவியலாக முட்டையிடும். முட்டையின் காலம் 5-7 நாட்கள்.


புழு: புமுக்கள் பழுப்பு நிறமாக வெண்ணிற உரோமங்களுடன் இருக்கும். முடிகள் விஷம் மற்றும் எரிச்சலூட்டும். தலை காப்ஸ்யூல் மற்றும் தொராசிக்கால்கள் பவள சிவப்பு நிறத்தில் உள்ளன. லார்வா காலம் 20-25 நாட்கள் நீடிக்கும்.



கூடு: லார்வாக்கள் மண் கூட்டில் கூடு கட்டும். கூடு(பூப்பல்) காலம் 8-10 நாட்கள்.


பூச்சி: மஞ்சள் கலந்து பழுப்பு நிறத்தில் இருக்கும்.

 

கட்டுப்படுத்தும் முறை


  • முட்டை குவியல்கள் மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்கவேண்டும். மழை பொழிந்தவுடன் ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து அந்துப்புச்சிகளை கவர்ந்து அழிக்கவும்.


  • தீ பந்தம் கொண்டு தண்டுப்பகுதியில் கூட்டமாகக் காணப்படும் புழுக்களை கொன்று அழிக்கவேண்டும். பூஞ்சான கொல்லி பியூவேரியாபாசியானா 20 கிராம்/லிட்டர் தெளிக்கவும்.


  • மீன் எண்ணெய் ரோசின் சோப் (FORS) 25 கிராம்/லிட்டர் அல்லது கார்பரில் 50 WP 2 கிராம்/லிட்டர் தெளிக்கவும் அல்லதுலேம்டா-Cyhalothrin10 EC @ 0.6 ml /லிட்டர்தண்ணீரில் தெளிக்கவும்.


தகவல் வெளியீடு


முனைவர் S.H.விஜயலட்சுமி, மின்னஞ்சல்: vijisumathirasi@gmail.com, கு.திருவேங்கடம், மின்னஞ்சல் : thiru.thanks5@gmail.com, முனைவர் செ.சேகர், மின்னஞ்சல்: sekar92s@gmail.com, உதவிப் பேராசிரியர்கள் (பூச்சியியல் துறை), ஆர்.வி.எஸ். வேளாண்மை கல்லூரி, தஞ்சாவூர்.


மேலும் படிக்க....


கத்திரி பயிரைத் தாக்கும் குருத்து மற்றும் காய்த் துளைப்பான் பூச்சி மேலாண்மை!!


டிராக்டருக்கு ரூ.5 லட்சம் வரை மானியம்! பல்வேறு வகையான விவசாய இயந்திரங்களுக்கான மானியங்கள் அறிவிப்பு!


பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரத்தினை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments