PM Kisan திட்ட 10வது தவணையை நேற்று புத்தாண்டில் பிரதமர் விடுவித்தார்!!
நமது உறுதிப்பாடுகளின் தொடர்ச்சியாகவும், அடித்தட்டு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது என்ற உறுதிப்பாட்டிற்கு ஏற்பவும் பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் (விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம்) 10-வது தவணை நிதிப் பயன்களைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார்.
இதன் மூலம் ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட தொகை 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான பங்கு மானியமாக ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகையையும் பிரதமர் விடுவித்தார். இந்த உதவித் தொகை மூலம் 1.24 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்த நிகழ்ச்சியின் போது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடனும்
பிரதமர் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் முதலமைச்சர்கள்,
துணை நிலை ஆளுநர்கள், வேளாண் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகளும்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாம் புத்தாண்டில் அடியெடுத்து வைத்தது பற்றி குறிப்பிட்ட பிரதமர், முந்தைய ஆண்டுகளின் சாதனைகளிலிருந்து பெற்ற ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பயணத்தை தொடங்க வேண்டியது அவசியம் என்றார்.
பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொள்ள நாடு மேற்கொண்ட முயற்சிகள், தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் நெருக்கடியான தருணத்தில் அதிகம் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கான ஏற்பாடுகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
அதிகம் பாதிக்கப்படக் கூடிய தரப்பினருக்கு உணவுப்பொருட்கள் வழங்குவதற்காக இந்த நாடு 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டது. நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அரசாங்கம் அயராது பாடுபட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள்,
புதிய மருத்துவக் கல்லூரிகள், நலவாழ்வு மையங்கள், ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு
இயக்கம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம் போன்ற மருத்துவக் கட்டமைப்பு
வசதிகளை மாற்றியமைக்கும் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் முயற்சிப்போம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் நாடு சென்று கொண்டிருக்கிறது. மக்களில் பலர் தங்களது வாழ்நாளை நாட்டிற்காக செலவிட்டு வருகின்றனர்,
அவர்கள் தான் தேசத்தை உருவாக்குகின்றனர். முன்பே அவர்கள் இந்தப் பணியை மேற்கொண்ட போதிலும் தற்போது தான் அவர்களது பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். “இந்த ஆண்டு நாம் நமது சுதந்திரத்தின் 75-வது ஆண்டைப் பூர்த்தி செய்ய இருக்கிறோம். நாட்டின் உறுதிப்பாடுகளுடன் வலிமையான புதிய பயணத்தைத் தொடங்க இதுவே உரிய தருணம், புதிய வீரியத்துடன் முன்னோக்கிச் செல்வோம்” என்று அவர் தெரிவித்தார்.
கூட்டு முயற்சிகளின்
வலிமை குறித்து விவரித்த பிரதமர், “130 கோடி இந்தியர்களும் ஒரே நடவடிக்கையை மேற்கொண்டால்,
அது வெறும் ஒரு அடி அல்ல, மாறாக 130 கோடி அடிகளுக்கு சமமானது“
என்று தெரிவித்தார்.
பிரதமரின் விவசாயிகள்
வருவாய் ஆதரவு நிதி, இந்திய விவசாயிகளுக்குப் பெரும் ஆதரவாக உள்ளது என்று தெரிவித்த
பிரதமர், இன்றைய ஒதுக்கீட்டையும் சேர்த்தால், 1.80 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகை,
நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் பிரதமர் பேசுகையில், இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவது பற்றி வலியுறுத்தினார். ரசாயனம் அற்ற விவசாயம் மண் வளத்தைப் பாதுகாப்பதற்கான பெரிய வழி என்று அவர் கூறினார். இந்த திசையை நோக்கிய முக்கிய நடவடிக்கை இயற்கை வேளாண்மை என்று கூறிய அவர், இதன் முன்னேற்றம் மற்றும் பயன்கள் பற்றி ஒவ்வொரு விவசாயியும் அறியச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
விவசாயிகள்
வேளாண்மையில் தொடர்ந்து புதுமையைப் புகுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், தூய்மை
போன்ற இயக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு பிரதமர் தமது உரையை
நிறைவு செய்தார்.
மேலும் படிக்க....
PM Kisan Samman Nidhi: 10வது தவனை இவர்களுக்கு கிடைக்காது!!
விவசாயிகள் நிதி உதவி திட்டம் பாரத பிரதமர் நாளை துவங்கி வைக்கிறார்!!
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலேர்ட்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...