PM Kisan
Samman Nidhi: 10வது தவனை இவர்களுக்கு கிடைக்காது!!
PM Kisan
Samman Nidhi திட்டத்தின் கீழ், இன்று வெளியிடப்பட்ட10வது தவணைத் தொகை, லட்சக்கணக்கான
விவசாயிகளின் கணக்குகளுக்கு வராது. இந்த திட்டத்தின் பணத்தை வருமான வரி செலுத்துபவர்களுக்கு
வழங்கக்கூடாது என்ற விதி உள்ளது குறிப்பிடதக்கது.
இந்நிலையில்,
ஒரு விவசாயி கடந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்தியிருந்தால், அவர் இந்த திட்டத்தின்
கீழ் விண்ணப்பிக்க முடியாது. ஆனால் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு
செய்தவர்கள் ஆதார் அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டனர்.
இப்போது அவர்களிடமிருந்து
பணம் திரும்பப் பெறப்படுகிறது. இந்த திட்டத்தில் முறைகேடாக பயன்பெறுபவர்களில் 56 சதவீதம்
பேர் வருமான வரி செலுத்துபவர்கள்.
PM Kisan திட்டத்தின்
கீழ் வருமான வரி செலுத்திய தகுதியற்ற விவசாயிகளின் பட்டியலை பீகார் அரசு வெளியிட்டுள்ளது.
பிரதமரின் கிசான் திட்டத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்திக் கொண்ட, ஒவ்வொரு கிராம சபையின்
விவசாயிகளின் பெயர்களும், தொலைபேசி எண்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
பீகார் அரசின்
டிபிடி (DBT)இணையதளத்தில் வருமான வரி செலுத்தும் விவசாயிகளின் பட்டியல் பிரத்யேகமாக
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு
2000 ரூபாய் கிடைக்காது
முன்னாள் அல்லது
தற்போது அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் விவசாயிகள், மேயர் அல்லது மாவட்ட பஞ்சாயத்து
தலைவர், எம்எல்ஏ (MLA),எம்எல்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.
இவர்கள் இந்த
திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். விவசாயம் செய்தாலும். மத்திய, மாநில அரசு அதிகாரிகள்
இதில் இடம் பெற முடியாது.
கடந்த நிதியாண்டில்
வருமான வரி செலுத்திய விவசாயிகளுக்கு பலன் கிடைக்காது. மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல்
ஓய்வூதியம் பெற்ற விவசாயிகளும் பயனடைய மாட்டார்கள். இதைத் தொடர்ந்து தொழில் வல்லுநர்கள்,
டாக்டர்கள், பொறியாளர்கள், சிஏக்கள், வழக்கறிஞர்கள், கட்டிடக்கலை வல்லுநர்கள் இந்த
திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
இந்தியாவில்
விவசாயியாகக் கருதப்படுபவர் யார்?
தேசிய விவசாயிகள்
கொள்கை-2007ன் படி, 'விவசாயி' என்பது, பயிரிடப்படும் பயிர்களின் பொருளாதார அல்லது வாழ்வாதார
நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நபர் மற்றும் பிற முதன்மை விவசாயப் பொருட்களின்
சாகுபடியில் ஈடுபட்டுள்ள நபர் என்று பொருள்படும்.
இதில் குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பங்குதாரர்கள், குத்தகைதாரர்கள், கோழிப் பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், மீனவர்கள், தேனீ வளர்ப்பவர்கள், தோட்டக்காரர்கள், மேய்ப்பர்கள் ஆகியோர் அடங்குவர்.
பட்டுப்புழு வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு மற்றும் வேளாண் காடு வளர்ப்பு
போன்ற பல்வேறு விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்களும் விவசாயிகளே. இதன்
அடிப்படையாக கொண்டு, 10வது தவனை வழங்க படும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க....
PM Kisan 10 வது தவணை E-KYC செய்யாவிட்டால் கிடையாது! மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...