தொடர் மழையில்
பல்வேறு பகுதிகளில் சம்பா பயிர்கள் பாதிப்பு! காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை!!
வளிமண்டல மேலடுக்கு
சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக
கடலோரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையின்
காரணமாக சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், நல்லூர் மாணிக்கவாசல், அழகிய நத்தம், கொண்டல்
உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா சாகுபடி (Samba Cultivation) தண்ணீரில்
மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
பயிர்கள் பாதிப்பு
கடந்த நவம்பர்
மாதம் பெய்த கன மழையில் தப்பிய பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில்
கனமழையின் காரணமாக பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் வடிகால் ஆறுகள்,
பாசன ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முழுவதுமாக தண்ணீர் நிரம்பியதால் விளைநிலங்களில்
தேங்கிய தண்ணீர் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடத்தின்
மேற்குப் பகுதியில் உளள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சேரும் மழை நீரானது இப்பகுதியின்
வழியாகவே கடலுக்கு செல்ல வேண்டும் என்பதால் இப்பகுதியை சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏக்கர்
சம்பா சாகுபடி முற்றிலுமாக சாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளது.
காப்பீடு வழங்க
கோரிக்கை
இனி இந்த பயிர்களை
காப்பாற்றவே முடியாது என்று கவலை தெரிவித்த விவசாயிகள் தங்கள் பகுதியில் வேளாண் துறை
அதிகாரிகளும் காப்பீடு நிறுவன அதிகாரிகளும் உரிய ஆய்வு செய்து முழு காப்பீடு
(Insurance) தொகை வழங்க வேண்டும் எனவும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க....
PMFBY: விவசாயிகளுக்கு ரூ.3300 கோடி கிடைக்கவில்லை, ஏன் தெரியுமா?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...