நெற்பயிரில் பூஞ்சான நோய்களின் மேலாண்மை! குலை நோய் தாக்குதலின் அறிகுறிகள்!!
குலை நோய் தாக்குதலின்
அறிகுறிகள்
இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். இதையே “குலைநோய்” என்கிறோம்.
கதிர் வெளி வந்தவுடன் பயிர்கள் சாய்ந்து விடும். கழுத்துப் பகுதியில் சாம்பல்
நிற ம்முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர்மணிகள் சுருங்கியும்/பகுதி
நிறைந்தும், கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இதை “கழுத்து குலைநோய்”
என்கிறோம். கணுக்கள் கருப்பு நிறமாக மாறி, உடைந்து விடும். இதை “கணுகுலைநோய்”
என்கிறோம்.
பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால், வெண்கதிர் அறிகுறி தோன்றும். கதிர்ப் பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப் பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும்.
கதிர்
மற்றும் கதிர்க் கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக (அ) அடர் பழுப்பு நிறமாக
இருக்கும். நெல் இரகங்களைப் பொருத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் வேறுபடும்.
குலைநோய் தாக்குதலை
கட்டுப்படுத்தும் முறைகள்
நோய் தாக்குதலைத் தாங்கும் இரகங்களான கோ 47, கோ 50, ஏடீடி 36, ஏடீடி 37, ஏஎஸ்டீ 16, ஏஎஸ்டீ 20, ஏடீடி 39, எஎஸ்டீ 19, டிபீஎஸ் 3, வெள்ளை பொன்னி, ஏடீடி 44, கோஆர்ஹச், பல்குனா, ஸ்வர்ணமுகி, சுவாதி, பிரபாட், ஐஆர் 64, ஐஆர் 36 மற்றும் ஜெயா ஆகியவற்றை பயிரிடுதல்.
கேப்டன்/கார்பன்டசிம்/திரம்/டிரைசைகலசோல்
2.0 கிராம்/கிலோ விதை (அ) சூடோமோனாஸ்/புளோரசன்ஸ் 10 கிராம்/கிலோ விதை ஆகிய ஏதோ ஒன்றோடு
என்றளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். டிரைசைக்கிலசோல் 120 கிராம்/ஏக்கர்,
(அ) அசாக்ஸிஸ்டேராபின் 5௦௦ மி.லி./எக்டர் மற்றும் த.மி.வே.பல்கலைக்கழகத்தின் பி.ஃப்-1
கலவையை தெளிக்கவும்.
கட்டுப்பாடு
முறைகள்
நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான ஏடீடி 44, பீஒய் 4, கோஆர்ஹச் 1, கோ 44, காவேரி பவானி, டிபிஎஸ் 4 மற்றும் தனு ஆகியவற்றை பயிரிடுதல். சூடோமோனாஸ்ஃபுளோரசன்ஸ் 10 கிராம்/கிலோ விதை, கேப்டன் அல்லது திரம் @ 2.0 கிராம்/கிலோ என்றளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நோய் பரவுதலைக் கட்டுப்படுத்த,
மேன்கோசெப் (2.0 கிராம்/லிட்டர்), மெட்டோமினோஸ்ட்ரோபின் 5௦௦ மி.லி./ எக்டருக்கு தெளிக்கவும்.
10-15 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்க வேண்டும்.
மஞ்சள் கரிப்பூட்டை
நோய் தாக்குதலின் அறிகுறிகள்
ஒவ்வொரு தனி தானியமும் மஞ்சள் நிற கனியுடலாக மாற்றம் அடைந்து காணப்படும். நோய் தாக்கப்பட்ட தானிய நெல்லில் மென்பட்டுத்துணி போன்ற தோற்றத்துடன் பச்சையான கருப்பு நிற நெற்பழ உருண்டைகள் காணப்படும்.
இவை நெல் உமிக்களுக்கிடையே காணப்படும் பூப்பகுதிகளை சுற்றியும் காணப்படும்.
கதிரிலிருக்கும் சில தானியங்கள் மட்டுமே தாக்கப்பட்டிருக்கும் மற்ற நல்ல மணிகளாகவே
இருக்கும்.
பூசண வளர்ச்சி தீவிரமாகும் போது, நெற்பழ உருண்டைகள் வெடித்து ஆரஞ்சு நிறமாக மாறி பின் மஞ்சளான பச்சை அல்லது கரும்பச்சை நிறத்திலும் மாறி விடுகிறது.
பொதுவாக இனப்பெருக்க நிலை மற்றும் பயிர்
முதிர்ச்சி நிலைகளில் இந்நோய், தாக்கப்பட்டு கதிரிலுள்ள சில தானியங்களை மட்டும் தாக்கி
மற்ற தானியங்களை நல்ல தானியங்களாகவே விட்டு விடுகின்றன.
கட்டுப்பாடு
முறைகள்
ஒரு கிலோ விதைக்கு
2.0 கிராம் என்றளவில் கார்பன்டசிம் உடன் விதை நேர்த்தி செய்தல் வேண்டும். கதிர் இலைப்பருவம்
மற்றும் பால் பருவங்களில் பூசண நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு காப்பர்ஆக்சி/குலோரைடு
2.5 கிராம்/லிட்டர் அல்லது புரோபிகோனசோல் 3 மிலி/லிட்டர் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு
ரசிகா, சாய்சங்கவி, சாந்தாராம், ராஜலட்சுமி, இளங்கலை வேளாண் மாணவர்கள், நிவேதா, இராமலிங்கம்,
முனைவர் செ.சேகர், திருவேங்கடம், உதவிப் பேராசிரியர்கள், பயிர் பாதுகாப்புத் துறை,
ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி, உசிலம்பட்டி, தஞ்சாவூர்.
மேலும் படிக்க....
நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp
Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...