Random Posts

Header Ads

நிலக்கடலை விதை உற்பத்தி செய்ய சில முக்கிய முறைகள்!!

 


நிலக்கடலை விதை உற்பத்தி செய்ய சில முக்கிய முறைகள்!!


அதிக இனத்தூய்மையும் கல், மண், தூசி, பதர் போன்றவை நீக்கப்பட்டு அதிக புறத்தூய்மையும், பூச்சி நோய் தாக்காததும் நல்ல முளைப்புத்திறன் உடைய வேகமாக வளர்ச்சியையும் கொடுக்க வல்ல விதைகளே தரமான விதைகள் ஆகும். 


இவ்வாறு தரமான நிலக்கடலை விதை உற்பத்தி செய்ய சில முக்கிய கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க விதைப்பண்ணை விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

நிலக்கடலையில் உயர் விளைச்சல் இரகங்களான தரணி, ஐசிஜிவி 00350, டிஎம்வி 13, கோ 7 மற்றும் விஆர்ஐ 6 ஆகிய நிலக்கடலை இரகங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 



விவசாயிகளுக்கு தேவைப்படும் நிலக்கடலை இரகங்களை வேளாண்துறை அலுவலர்கள் மூலம் மானிய விலையில் பெற்று, விதைப்பண்ணை அமைக்கலாம். 


நிலக்கடலை விதைப்பண்ணை அமைக்க ஒரு ஏக்கருக்கு, 80கிலோ விதைகள் தேவைப்படும்.. நிலக்கடலை விதைகளை 30 செ.மீக்கு, 10 செ.மீ இடைவெளியில் விதைத்து, ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையினை பராமரிக்க வேண்டும். 


ஒரே மாதிரியான விதைகளை பயன்படுத்தி, சரியான இடைவெளியில் விதைத்தால் பயிர் எண்ணிக்கை சீராக காணப்படும். இதனால் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

நிலக்கடலை விதை நேர்த்தி


நிலக்கடலை விதை மூலமும், மண்மூலமும் பரவும் வேர் அழுகல், தண்டு அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களை, கட்டுப்படுத்த உயிரியியல் பூஞ்சான மருந்து டிரைக்கோடெர்மா விரிடியைக் கொண்டு விதை நேர்த்தி செய்திட வேண்டும். 



ஒரு கிலோ விதைப்பருப்புக்கு 4 கிராம் என்ற அளவில், விதையை விதைப்புக்கு முன் ஈரப்படுத்தி பின் பூஞ்சானத்தை அதன் மீது தூவி கலக்க வேண்டும்.

 

நிழலில் உலர்த்தி நுண்ணுயிர் நேர்த்தி


முதலில் 1 லிட்டர் ஆறிய வடிகஞ்சியில் 200 கிராம் (1 பாக்கெட்) ரைசோபியம் மற்றும் 200 கிராம் (1 பாக்கெட்) பாஸ்போ பாக்டீரியாவையும் கொட்டி பிறகு குச்சிகளைக் கொண்டு நன்கு கிளறி பின் விதைகளை மேலும் கீழும் பரப்பி நுண்ணுயிர் நன்கு படும்படி செய்து , 15-30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்க்குள் விதைக்க வேண்டும்.

 

ரைசோபியம் நுண்ணுயிரி நிலக்கடலை பயிரின் வேர்களில், வேர் முடிச்சுகளை உண்டாக்கி அதனுள் இருந்து கொண்டு காற்று மண்டலத்தில் உள்ள தழைச்சத்தை பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

 


பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிரி நிலத்திலிருந்து மணிச்சத்தை பயிர்களால் கிரகிக்க முடியாத நிலையில் அதனை பயிர் ஏற்கும் நிலைக்கு மாற்றித் தருகிறது. இதனால் வேர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.

 

ஒரு ஹெக்டேருக்கு ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

 

ஒரு ஹெக்டேருக்கு 12.5 டன் நன்கு மக்கிய தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் உரத்தினை இட்டு நிலத்தினை 4-5 தடவை நன்கு உழவு செய்ய வேண்டும்.


பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்து, உரங்களை 40:40:60 கிலோ/ ஹெக்டேர் என்ற அளவில் அடிப்புரமாக இடவேண்டும். மேலும் போராக்ஸ் 10 கிலோ மற்றும் நுண்ணூட்டச்சத்து 12.5 கிலோவினை 50 கிலோ மணலுடன் கலந்து விதைத்த உடன் நிலத்தின் மேல் இடவேண்டும்.



மேலும் நிலக்கடலை பயிரில் அதிக அளவில் காய்கள் திறட்சியாக இருக்கவும் கூடுதல் மகசூல் பெறவும் இலைவழி உரம் தெளிப்பு அவசியம். இதற்கு டிஏபி – 2.5 கிலோ, அம்மோனியம் சல்பேட் – 1 கிலோ மற்றும் போராக்ஸ் 1/2 கிலோ ஆகியவற்றை 37 லிட்டர் தண்ணீரில் கரைத்து முதல் நாள் இரவு ஊறவைத்து, 


இதனை வடிகட்டும் போது 32 லிட்டர் அளவில் உரக் கரைசல் கிடைக்கும். இதனுடன் 468 லிட்டர் தண்ணீர் கலந்து 500 லிட்டர் அளவில் ஒரு ஹெக்டேருக்கான இலைவழி உரத்தினை தெளித்து கூடுதல் மகசூல் பெறலாம்.

 

நிலக்கடலை உற்பத்தியில் ஜிப்சம் இடுதல்


நிலக்கடலை உற்பத்தியில் ஜிப்சம் இடுதல் மிக அவசியம். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்து மற்றும் கந்தகச் சத்து நிறைந்துள்ளதால் காய் திறட்சிக்கும் எண்ணெய் இறங்குதலிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜிப்சம் ஒரு ஹெக்டேருக்கு 400 கிலோ அளவில் விதைத்த 40 – 45ம் நாளில் இட்டு செடிகளைச் சுற்றி மண் அணைத்திட வேண்டும்.

 


எனவே, அனைத்து விவசாயிகளும், அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி வல்லுநர் விதை மற்றும் ஆதாரநிலை நிலக்கடலை விதைகளை வாங்கி ஆதாரம் மற்றும் சான்று நிலை விதைப்பண்ணைகளை அமைத்து, 


அதிக மகசூலும் மற்றும் தரமான விதைகளை உற்பத்தி செய்து வழங்கி அதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என இராமநாதபுரம் விதைச்சான்று அங்ககச் சான்று உதவி இயக்குநர் ம.மதுரைசாமி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


அதிக மகசூல் பெற மாற்றுப்பயிர் சாகுபடி செய்வது மற்றும் ஒருங்கிணைந்த முறையில் களை மேலாண்மை!!


பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரத்தினை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!!


பாரம்பரிய பூச்சிக் கட்டுப்பாடு முறைகள்! பூச்சி சேதத்தைத் தடுக்க வழிமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments