எளிய பராமரிப்பு, அதிக இறைச்சி, நிறைவான லாபம்!! அதிக லாபம் தரும் முயல் வளர்ப்பு!!
அதிக லாபம் தரும் முயல் வளர்ப்பு
முயலினை வளர்க்க பெரும்பாலும் சிறிய இடம் போதும். பிற கால்நடைகள் போன்று அதிக இடம் இதன் வளர்ப்புக்கு வேண்டியதில்லை. குறிப்பிட்ட சில தீவினங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உண்ணக் கொடுத்தாலே போதும். பெரிதாக செலவு இல்லை.
முயலினை வளர்க்க உணவுகள்
உணவு எனும் நிலையில் முயலுக்கு, காலையிலும், மாலையிலும் என இரு வேளைகள் உணவு கொடுத்தாலே போதுமானது. அதிலும் குறிப்பாக, பசுந்தீவனம், அடர்தீவனம், முட்டைக்கோஸ் தோல், கேரட் இலை, ஆலமர இலை, வேலிக்காத்தான் இலை, வாழை இலை, முள்ளங்கி இலை, அகத்திக்கீரை, முதலானவற்றை உணவாக வழங்குதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலையைக் கொடுத்தல் நல்லது.
கம்பு, மக்காச்சொளம், மிருதுவான கோதுமைத்தவிடு, கடலை பிண்ணாக்கு, தாது உப்பு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் 100 கிராம் வீதம் கொடுக்க வேண்டும்.
முயலுக்கான இருப்பிடம்
முயலுக்கான கொட்டகைகளைக் காற்றோட்டம் இருக்குமாறு அமைத்தல் நல்லது. அதன் கொட்டகைகளைத் தென்னை மற்றும் பனை ஓலைகளால் அமைப்பது நல்லது.
வெளிச்சம் குறைவாக இருக்குமாறு அமைத்தல் வேண்டும். தகரத்தில் கொட்டகை அமைக்க நேர்ந்தால் கொட்டகை மீது தென்னை ஓலைகளைப் பரப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் வெயிலின் சூடு பெரிதாக உள் தாக்காமல் இருக்கும்.
ஒவ்வொரு முயலுக்கும் பராமரிப்பு
முயல் பிறந்து ஆறு மாதத்தில் பெண் முயல் பருவத்துக்கு வரும். 8 மாத அளவில் ஆன்முயல் பருவத்துக்கு வரும். இந்நிலையில் பெண் முயலையும், ஆண் முயலையும் கூண்டில் ஒரு இரண்டு நாட்கள் இணைசேர விட்டு பிரித்து வைக்க வேண்டும்.
இணைசேர்ந்த 28 அல்லது 30-ஆம் நாளுக்குள் குட்டி ஈனும். குட்டிகள் பிறந்து 12-ஆம் நாளில் கண் திறக்கும். அது வளர்ந்து 4 மாத நிறைவில்தான் பாலினம் கண்டுகொள்ள முடியும்.
ஒவ்வொரு முயலுக்கும் 45 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைக் கொடுத்துக் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அதோடு, முயல்களைத் தூக்கும்பொழுது அதன் காதுகளைக் கொண்டு தூக்கக் கூடாது. அதோடு முயல்களை அடிக்கடித் தூக்கக் கூடாது. அடிக்கடி தூக்குவதால் அதன் ரோமங்கள் உதிர வாய்ப்பு உள்ளது.
முயல் இறைச்சியில் மருத்துவக் குணம்
முயல் இறைச்சியில் குறைவான கொழுப்பும், அதிகமான புரதமும் இருப்பதால் இதை உண்ணுதல் நல்லது. முயல் இறைச்சி குடல்புண், மலச்சிக்கல் முதலானவற்றை நீக்கும்.
அதோடு முயலின் இறைச்சியில் சோடியத்தின் அளவு குறைவாக உள்ளதால் வயதானவர்கள், இதய நோய் உள்ளவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் உண்ணும் நல்ல இறைச்சியாக இது இருக்கின்றது. எனவே குறைந்த செலவில் அதிக லாபத்தினை ஈட்டித் தரும் கால்நடை வளர்ப்பாக முயல் வளர்ப்பு இருக்கின்றது.
மேலும்
படிக்க....
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசின் மகத்தான இரண்டு திட்டங்கள்!!
தமிழக வேளாண் துறை பட்ஜெட் 2022-23! முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் முழு விபரம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...