மண் வளம் அதிகரிக்க பல பயிர் சாகுபடி குறித்த தொழில்நுட்பங்கள்! முழு விபரம் உள்ளே!!


சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாரம் விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநர் அ.வளர்மதி, மண் வளம் அதிகரிக்க பல பயிர் சாகுபடி குறித்த தொழில்நுட்பங்கள் பின்வருமாறு வழங்கினார்.


பல விதமான பலவகை பயிர்களை பயிர் செய்து நிலத்திலேயே மடக்கி உழும் போது அது நிலத்தின் எருவாக மாறி மண்வளத்தை கூட்டுகிறது. மேலும் பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய சத்தை இயற்கையாகவே கிடைக்க இது வழி செய்கிறது. அதற்கு நாம் பின்வருவனவற்றை பின்பற்ற வேண்டும்.



தானியப் பயிர்கள்


சோளம் 750 கிராம், கம்பு 250 கிராம், தினை 200 கிராம், சாமை 250 கிராம், வரகு 300 கிராம், குதிரைவாலி 250 கிராம்- பனிவரகு 250 கிராம் இவற்றில் ஏதாவது 4 பயிர்களை எடுத்து கொள்ளவும்.


வாசனைப் பயிர்கள்


கொத்தமல்லி 1 கிலோ, கடுகு 1/2 கிலோ, சோம்பு 1/4 கிலோ வெந்தயம் 1/4 கிலோ எடுத்துக்கொள்ளவும்.



பயறு வகைகள்


பாசிப்பயறு 2 கிலோ, உளுந்து 2 கிலோ கொள்ளு 1 கிலோ, தட்டைப் பயிறு 2 கிலோ, துவரை 1 கிலோ இவற்றில் ஏதாவது 4 பயிர்களை எடுத்து கொள்ளவும்.


எண்ணெய் வித்துகள்


எள் 250 கிராம், நிலக்கடலை 2 கிலோ, ஆமணக்கு 3 கிலோ, சூரியகாந்தி 1 கிலோ, சோயா 2 கிலோ இவற்றில் ஏதாவது 4 இரகங்களை எடுத்து கொள்ளவும்.


தழைச்சத்து தரும் பயிர்கள்


சணப்பு 2 கிலோ, தக்கைப்பூண்டு 1 கிலோ, கொழிஞ்சி 1 கிலோ, அகத்தி 1 கிலோ, சித்தகத்தி 1 கிலோ இவற்றில் ஏதாவது 4 பயிர்களை எடுத்து கொள்ளவும்.


இவை அனைத்தும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு சுமார் 20 கிலோ அளவுக்கு பலவகை பயிர்களின் விதைகளை பிரதான பயிர் சாகுபடிக்கு 45 நாட்களுக்கு முன் விதைக்க வேண்டும். விதைத்த பலவகை பயிர் விதைகள் நாற்பது நாட்களில் வளர்ந்து இருக்கும். 



இதை அப்படியே மடக்கி உழவு செய்து விட வேண்டும். இதனால் இதில் உள்ள இலைகள், வேர்கள் நன்கு மக்கி மண்ணோடு கலந்து மண்ணை வளப்படுத்தும் மேலும் மண்ணில் நுண்ணுயிர்களை பெருக்கம் அடையச் செய்யும்.


அதிக இரசாயண உரங்களை பயன்படுத்திய நிலங்களுக்கு இதைபோல் பல முறை பல பயிர் விதைப்பும் மடக்கி உழவும் செய்வதால் வெகு விரைவாக மண் வளமானதாக மாற்றமடையும்.

 

மேலும் படிக்க....


மண் பரிசோதனை செய்து உரச்செலவை குறைத்திடலாம்! வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை!!


தென்னை சாகுபடி நாற்பதுக்கும் மேற்பட்ட நெட்டை, குட்டை இரகங்கள் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது!!


நெல் விதை நேர்த்தி முறைகள்! முளைப்புத்திறனை மேம்படுத்துவதற்கான விதை நேர்த்தி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post