2022-23ம் ஆண்டு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய டிச- 31 கடைசி நாள் வேளாண்மை இணை இயக்குநர் தகவல்!!
நாமக்கல் மாவட்டத்தில், 2022-23ம் ஆண்டு ராபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிர்க்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட விவசாயிகளை வேளாண்மை இணை இயக்குநர், சு.துரைசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் கூறுகையில் பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு ரூ.311.22/- கடைசி தேதி 31.12.22-க்குள் செலுத்த வேண்டும்.
இது தொடர்பான மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குநர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக் காய்களுக்கான விலை உயர வாய்ப்பு!! விலை முன்னறிவிப்பு!!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்! குவிண்டாலுக்கு அதிக பட்சம் எவ்வளவு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...