இலவச மின்சாரம் பெறும் விவசாய இணைப்புகளுக்கு மின் மீட்டர்கள் பொருத்தும் பணி!!
தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இதில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளைப் பொறுத்தவரை, 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வு கணக்கிடப்பட்டு வருகிறது. High voltage மின்சாரம் மாதந்தோறும் கணக்கிடப்படும். மின் நுகர்வு கணக்கிட வீடுகளில் தற்போது "நிலையான, static" மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மின்வாரியம் இதன் மூலம், மின் வாரிய ஊழியர்கள் கணக்கிட்டு, நுகர்வோருக்கு தெரிவிக்கும் கட்டணத்தை, நுகர்வோர் செலுத்துகின்றனர். அதேபோல் தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர குடிசை வீடுகளுக்கும், விவசாயத்திற்கும் முற்றிலும் இலவசமாகவும், கைத்தறிக்கு 300 யூனிட் வரையும் மின்சாரம் வழங்கப்படுகிறது, அதே நேரம், விசைத்தறிக்கு 1000 யூனிட்கள் வழங்கப்படுகிறது.
இதற்காக, தமிழக அரசு மின்சார வாரியம் செய்யும் செலவினத்திற்கு மானியம் வழங்குகிறது. மின்சாரம் இலவசம் என்பதால், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு மீட்டர் பொருத்தப்படவில்லை. எனவே, இந்த பிரிவுகளுக்கான மானியத் தொகையை மாநில அரசு வாரியத்திற்கு வழங்குகிறது.
முறைகேடுகள்
ஆனால், இதில் விதிமீறல்களை தடுக்கும் வகையில், மீட்டர் அமைக்காமல் எந்தப் பிரிவிலும் மின் இணைப்பு வழங்கக் கூடாது என்றும், ஏற்கனவே இணைப்பு வழங்கப்பட்டிருந்தால், மீட்டர் பொருத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பலமுறை அறிவுறுத்தி வந்தது.
ஆனால், மீட்டர் பொருத்தினால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என தமிழகத்தில் சில போராட்டங்கள் எழுந்தன. ஆனால், தமிழகத்தில் இதுவரை 2 லட்சம் விவசாய இணைப்புகளுக்கு மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடதக்கது.
மின் இணைப்பு
மீதமுள்ள இணைப்புகள் அளவிடப்படவில்லை. ஆனால் இனிமேல், ஒவ்வொரு மாதமும் இலவச மின்சாரத்தை துல்லியமாகக் கணக்கிட்டு, மானியத் தொகையை மட்டும் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்துக்கு மீட்டர் பொருத்த இன்னும் 30 லட்சம் மீட்டர் தேவைப்படுகிறது. அதற்கான தொகை மின் வாரியத்திடம் இல்லை. எனவே, வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடப்பதால், அங்குள்ள பழைய மீட்டர்களை விவசாய மாற்று குடிசை இணைப்புகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க....
சூடு பிடிக்கும் கோடை சாகுபடி! விதை நெல் இருப்பு குறித்து வேளாண் இயக்குனர் முக்கிய தகவல்!
மழையால் எள் சாகுபடி கடும் பாதிப்பு! கண்ணீரில் விவசாயிகள்! நிவாரணம் வழங்க கோரிக்கை..!
இன்று உருவாகிறது 'மோக்கா' புயல் 4 நாட்கள் மழை பெய்யும் என அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...