மழையால் எள் சாகுபடி கடும் பாதிப்பு! கண்ணீரில் விவசாயிகள்! நிவாரணம் வழங்க கோரிக்கை..!
திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு பதிலாக பயிர்செய்த எள் சாகுபடி கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பெய்த மழையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எள் சாகுபடி செய்த சிறு குறு விவசாயிகள் எள் சாகுபடிக்காக செலவழித்த தொகையை கூட எடுக்க முடியாது என வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு சம்பா சாகுபடி நிறைவடைந்த உடன் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கருக்கு மேலாக எள் சாகுபடி செய்யப்பட்டது. எள் பயிருக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. அதாவது குறிப்பிட்ட கால அளவில் எள் விதைக்கப்பட்ட நாளிலிருந்து 30 வது நாள், அதன் பிறகு பூ வைக்கக்கூடிய 45 வது நாள், அதன் பிறகு காய் கொண்ட அறுபதாம் நாள் ஆகிய நிலையில் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
இந்த கோடைகாலத்தில் எள் பயிர் செய்யப்பட்ட நாளிலிருந்து அவ்வப்போது லேசான கோடைமழை பெய்து, விவசாயிகள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் எள் சாகுபடி மேற்கொள்வார்கள் நல்ல விளைச்சலும் தரும்.
ஆனால் இந்த முறை எள் பயிர் செய்த சிறு குறு விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளார்கள். தாங்கள் செலவு செய்த தொகையை எடுக்க முடியுமா என வேதனையில் உள்ளார்கள். ஏனென்றால் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக எள் சாகுபடி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் எள்ளுக்கு எள்ளளவு தண்ணீர் போதுமான நிலையில், தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் 4 நாட்களாக மழை பெய்ததால் எள் செடிகள் சோர்வடைந்து மகசூல் பெற முடியாத சூழ்நிலையில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
ஒவ்வொரு விவசாயியும் ஏக்கர் ஒன்றிற்கு எள் சாகுபடிக்காக இரண்டு முறை உழவு எள் விதை , பாத்தி கட்டி வாய்க்கால் இழுத்தல், உரம், மருந்து என சுமார் 7000 ரூபாய்க்கு மேலாக செலவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இதனால் சிறு குறுவிவசாயிகள் தாங்கள் செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஆகவே திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக மாவட்டம் முழுவதும் எள் சாகுபடி பாதிப்பை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல சிறு குறு விவசாயிகள் எள் சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யவில்லை. ஆகவே பயிர் காப்பீடு செய்யாத சிறு குறு விவசாயிகளையும் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நிலத்தடி நீரை சேமிப்பதற்காக கோடை பருவ நேரத்தில் அதிகமாக நீர் தேவைப்படும் நெல் சாகுபடியை மேற்கொள்ளாமல், கோடை பயிரான எள் சாகுபடி மேற்கொண்ட சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க....
இன்று உருவாகிறது 'மோக்கா' புயல் 4 நாட்கள் மழை பெய்யும் என அறிவிப்பு!!
வேலை செய்யாத பயிர் காப்பீட்டு செயலி- வேதனையில் விவசாயிகள்!!
விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...