வேலை செய்யாத பயிர் காப்பீட்டு செயலி- வேதனையில் விவசாயிகள்!!


ஒரு மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளால் பயன்படுத்தப்படும் பயிர் காப்பீட்டு செயலியில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய இயலவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY-PM Fasal Bima Yojana) ஐ அறிமுகப்படுத்தியபோது, கணிக்க முடியாத பருவமழை, வறட்சி மற்றும் பிற தடுக்க முடியாத அபாயங்களை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு இது ஒரு நிரந்தர தோழனாக செயல்படும் என வர்ணிக்கப்பட்டது.



பயிர் காப்பீட்டு செயலியில் தொழில்நுட்பக் கோளாறுகள்


வறட்சி, வெள்ளம், பூச்சி அல்லது நோய் தாக்குதல்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. பயிர் இழப்புக்கான காப்பீட்டுத்தொகை உரிமை கோரல்களைத் தாக்கல் செய்வதற்கு வசதியாக “பயிர் காப்பீட்டு செயலி” 2018-ல் தொடங்கப்பட்டது.


மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட ஆண்ட்ராய்டு ஃபோன்களின் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்தச் செயலி, விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது காப்பீட்டுக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க விவசாயிகள் முயன்ற போது செயலி ஒழுங்காக செயல்படாததால், தங்களால் காப்பீடு கோர முடியவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.



விவசாயிகளின் விரக்தியை ப்ளே ஸ்டோரில் உள்ள செயலியின் மதிப்புரைகள் பிரிவில் பார்த்தாலே தெரியும். பயிர் காப்பீட்டு செயலியில் பல தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதால், விவசாயிகளால் பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய இயலவில்லை எனவும் இதனால் உரிய வகையில் காப்பீட்டுத் தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


PMFBY இன் கீழ், பயிர் சேதம் குறித்து 72 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனங்களை அழைக்க வேண்டிய பொறுப்பு காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உள்ளது, இல்லையெனில் பயிர் காப்பீட்டின் பலனைப் பெறுவதற்கான வாய்ப்பை அவர்கள் இழக்க நேரிடும். விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உடனடியாக தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யுமாறு கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.



மேலும் படிக்க....


விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!


வரும் வாரங்களில் பருத்தி விலை விளைச்சல் விற்பனை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!!


விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பவர் ஸ்பிரேயர் மற்றும் கால்நடை சிறப்பு முகாம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post