இன்று உருவாகிறது 'மோக்கா' புயல் 4 நாட்கள் மழை பெய்யும் என அறிவிப்பு!!


வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 'மோக்கா' புயலாக வலுவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி பகுதிகளில், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதே போன்று, தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.


இதன் காரணமாக, அப்பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக் கடல் பகுதிகள் நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. 



இந்த பின்னணியில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் தொடர்ச்சியாக, மே 11 வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களில், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதி, அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நான்கு நாட்களில், மணிக்கு, 50 முதல், 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளது. 



இந்த நாட்களில், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஏற்கனவே, ஆழ் கடலுக்கு சென்றவர்கள், இன்று கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க....


வேலை செய்யாத பயிர் காப்பீட்டு செயலி- வேதனையில் விவசாயிகள்!!


வரும் வாரங்களில் பருத்தி விலை விளைச்சல் விற்பனை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!!


விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post