தொடரும் கோடை மழை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வீணானதால் நிவாரணம் வழங்க கோரிக்கை!!
தியாகதுருகம் சுற்றுவட்டாரத்தில் தொடரும் கோடை மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வீணானதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சுற்றுவட்டாரத்தில் கோடை மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த கூத்தக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேலாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்து வீணாகியுள்ளது.
நெல்மணிகள் மழை நீரில் நனைந்து முளைக்க தொடங்கி இருப்பதால் விவசாயிகள் செய்வதறியாமல் பரிதவித்து வருகின்றனர். கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30,000 செலவிட்டதாக கூறும் விவசாயிகள் மழையால் தங்களது எதிர்காலமே கேள்விக்குறியாகி இருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
வாய்க்கால்கள் புதர்மண்டி கிடப்பதால் வயல்களில் இருந்து தண்ணீர் வெளியேற வழியின்றி குளம் போல காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே தங்களால் விவசாயத்தை தொடர முடியும் என கூத்தக்குடி விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க....
இலவச மின்சாரம் பெறும் விவசாய இணைப்புகளுக்கு மின் மீட்டர்கள் பொருத்தும் பணி!!
மழையால் எள் சாகுபடி கடும் பாதிப்பு! கண்ணீரில் விவசாயிகள்! நிவாரணம் வழங்க கோரிக்கை..!
இன்று உருவாகிறது 'மோக்கா' புயல் 4 நாட்கள் மழை பெய்யும் என அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...