கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பவர் ஸ்பிரேயர் மற்றும் பண்ணைக் கருவிகள் தொகுப்பு வழங்கும் சிறப்பு முகாம்!!
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் ஆவிக்கோட்டை பஞ்சாயத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பவர் ஸ்பிரேயர் மற்றும் பண்ணைக் கருவிகள் தொகுப்பு வழங்கும் சிறப்பு முகாம் வேளாண் துறைமூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட மூலம் 50% மானியத்தில் வழங்கப்படும் பவர் ஸ்பிரேயர் மற்றும் பண்ணை கருவிகள் தொகுப்பு வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் 15 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பவர் ஸ்பிரேயர்களும் 12 விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளும் 50% மானிய விலையில் ஆவிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் ஆவி கோட்டை கிராமத்தை சேர்ந்த 150 மேற்பட்ட விவசாயிகள் மூன்று நாள் முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மானியத் திட்டங்கள் மற்றும் மரக்கன்றுகள் தேவை விபரம் வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளில் இருந்து மானியத்தில் தேவைப்படும் கருவிகள் ஆகியவற்றிற்காக முன்னுரிமை விவரங்களை பதிவு செய்தனர்.
அட்மாதித்த அலுவலர்கள் சுகிதா ராஜு அய்யா மணி ஆகியோர் உழவன் செயலினை வருகை புரிந்த விவசாயிகளின் செல்போனில் பதிவு செய்து கொடுத்தனர்.
வேளாண்மை அலுவலர் இளங்கோ துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோர் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வருகை புரிந்த விவசாயிகளுக்கு விளக்கி கூறி பதிவு செய்தனர். வேளாண்மை உதவி அலுவலர் முருகேஷ் கலைஞர் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்குவதற்காக உழவன் செயலியில் பதிவு செய்தார்.
மேலும் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு தேவைப்படும் மாநிலத் திட்டங்கள் பற்றி கூறி உழவன் செயலி மூலம் பதிவு செய்யும் பணியினை மேற்கொண்டார்.
ஆவிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வேழவேந்தன் அவர்கள் மூன்று நாளும் முகாமில் கலந்து கொண்டு ஆவிக்கோட்டை பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகள் ஆர்வமுடன் மானிய திட்டங்களை பெறுவதற்கு பதிவு செய்திட விவசாயிகளை ஊக்கப்படுத்தினார்.
மேலும் இவ்வாண்டு ஊரக வளர்ச்சித் துறை மூலம் செய்ய வேண்டிய பணிகள் குறித்த தேவைப்பட்டியலையும் வழங்கினார். ஆவிக்கோட்டை மேலாண்மை குழு கூட்டத்தில் வைரவ சுந்தரம் சங்கர் அண்ணாதுரை, நடராஜன் சதாசிவம் பாண்டியன் சதீஷ்குமார் உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு கிராம முன்னேற்றத்திற்கு தேவையான முன்னெடுப்பு பணிகள் பற்றியும் எடுத்துக் கூறியதை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி பதிவு செய்தார்.
ஆவிக்கோட்டை மெய்கை விநாயகர் கோவிலில் நடைபெற்ற முகாமுக்கு ஏற்பாடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் நன்றி கூறினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
வைக்கோல் கொள்முதல் செய்ய அலைமோதும் வியாபாரிகள்!
வரும் வாரங்களில் பருத்தி விலை விளைச்சல் விற்பனை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!!
விவசாயிகளே!! குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள் இன்றே வாங்கி பயன்பெறுவீர்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...