1400 ஏக்கருக்கு விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பு உரங்கள் 100% மானியத்தில்!!



1400 ஏக்கருக்கு விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பு உரங்கள் 100% மானியத்தில்!! 


குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் கீழக்குறிச்சி சேர்ந்த விவசாயிகளுக்கு ஆத்மா திட்ட தலைவர் இளங்கோ 100 சத மானியத்தில் உரங்கள் வழங்கினார் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் ஆறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1400 ஏக்கருக்கு விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் கீழ் உரங்கள் 100% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. 



இன்று கீழ குறிச்சி பகுதியை சேர்ந்த 80 விவசாயிகளுக்கு மதுக்கூர் வட்டார ஆத்மா திட்ட தலைவர் இளங்கோ நூறு சத மானியத்தில் உரங்கள் வழங்கி குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வேளாண் உதவி அலுவலர்களை அணுகி காலத்தை மானியத்தில் உரங்களை பெற்றுக் கொள்ளவும் உர செலவு குறைவதால் விவசாயிகளுக்கு லாபம் அதிகம் கிடைக்கும் என்பதையும் கூறி களப்பணியை விரைவாக ஆற்றி காலத்தே அனைத்து விவசாயிகளுக்கும் மானியத்தில் உரம் கிடைப்பதை உறுதி செய்திட கூறினார். 



வேளாண்மை அலுவலர் இளங்கோ  மற்றும் உதவிவேளாண்மை அலுவலர்கள் ஜெரால்டு பூமிநாதன் சுரேஷ் ராமு மற்றும் தினேஷ் ஆகியோர் திருச்சியில் நடைபெற உள்ள விவசாய கண்காட்சிக்கு விவசாயிகள் அனைவரையும் கலந்து கொள்ள துண்டு பிரசுரங்களை வழங்கினார். 


வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மண்டலகோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் பழனிவேலு மற்றும் நிவேதா ஆகியோர் விவசாயிகளின் ஆவணங்களை சரிபார்த்து விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினார் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி கூறினார்.



தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரங்கள்!!


நிலுவையில் இருந்த விவசாயிகளின் காப்பீட்டுத் தொகை ரூ. 258 கோடி வெளியீடு!!


பசு மாட்டினை பராமரிப்பதற்கு ரூ.14,000/- ஆட்சியர் அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments