கோடை உளுந்து சாகுபடி!! உளுந்து விவசாயிகளுக்கு பயறு ஒண்டர் வளர்ச்சி ஊக்கி விநியோகம்!!
அட்மா திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டார உளுந்து விவசாயிகளுக்கு பயறு ஒண்டர் வளர்ச்சி ஊக்கி விநியோகம். மதுக்கூர் வட்டாரத்தில் கோடை உளுந்து சாகுபடி மார்ச் மாதத்தில் 200 எக்டருக்குக்கு மேல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்பொழுதுபூக்கும் பருவத்தில் உள்ளது. விவசாயிகள் பொதுவாக 35 மற்றும் 50 ஆம் நாட்களில் டிஏபி இலைவழி உரம் தெளிப்பது உண்டு.
டீஏபி இலைவழி உர தெளிப்புக்கு மாற்றாக வழங்கப்படும் பல்சஸ்ஒண்டர் பூக்கள் உதிர்வதை தடுக்கும் 20சத மகசூல் அதிகரிக்கிறது. வறட்சிதாங்க உதவும். இலைவழி தெளிப்பின் மூலம் உளுந்து பயிருக்கு பேரூட்டங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்து கலந்து கிடைப்பதால் பூக்கள் உதிர்வதை தடுக்கும் . ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டரை 20லிட்டர் நீரில் கலந்து டேங்குக்கு 1 ஒரு லிட்டர் கரைசல் ஒன்பது லிட்டர் நீர் கலந்து மாவுக்கு ஏழு டேங்கு தெளிக்க வேண்டும். காலை 9 டு 10 க்கு முன்னரும் மாலை வேளையில் வெயில் தாழ்ந்த நாலு மணிக்கு பின்னரும் தெளிப்பது மிக அவசியம்.
இலைதுளைகள் மாலை நேரத்தில் மட்டுமே திறந்திருப்பதால் பயறு ஒன்டர் எளிதாக உளுந்து பயிரினால் கிரகிக்கப்பட்டு நாலு மணி நேரத்தில் அதன் விளைவு தெரியும். நாலு மணி நேரத்தில் இலைகள் கரும்பச்சை நிறத்துக்கு மாறி அதிக ஒளிச்சேர்க்கை நடப்பதால் பயிர்கள் வேர் மூலம் உறிஞ்சும் சத்துகளின் அளவு அதிகரிக்கிறது. அதிக வேர் முடிச்சுகள் உருவாகிறது.
விளைவாக பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து தேவையான நுண்ணூட்ட சத்துக்கள் பூக்கும் பருவத்தில் வழங்கப்படுவதால் பூக்கள் கொட்டாமல் அனைத்தும் காய்களாக மாறும். 450 ரூபாய் செலவழிப்பதன் மூலம் விவசாயி ஏக்கருக்கு 100 லிருந்து 150 கிலோ வரை கூடுதலாக உளுந்து மகசூல் கிடைக்கும்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்பத்திற்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி!!
கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!
விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...