
மதுக்கூர் வட்டாரம் ஆலத்தூர் பஞ்சாயத்தில் வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்!!
தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் .
பட்டுக்கோட்டை வட்டத்திற்கான மக்கள் நேர்காணல் முகாம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் புதன்கிழமை இன்று மதுக்கூர் வட்டாரம் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள வீஆர்எம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கலந்துகொண்டு மக்கள் நேர்காணல் முகாம் என்பது அரசிடம் இருந்து மானியங்களை பெறுவதற்கு வழிமுறைகள் தேவையான ஆவணங்கள் தகுதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு துறை வாரியாக ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கான அருமையான வாய்ப்பாகும்.
குறிப்பிட்ட பயனாளிகளுக்கு மட்டும் அரசின் மாநில திட்டங்கள் பயன்படுவதை தவிர்த்து சமூகத்தின் அனைத்து நிலை மக்களும் அனைத்து திட்டங்களையும் அறிந்து தேவையான மானிய உதவிகளை அரசிடம் இருந்து பெற்று வாழ்க்கை உயர்வதற்கு மக்கள் நேர்காணல் முகாம் மிகச் சிறந்த வாய்ப்பு.
இதனை பட்டுக்கோட்டை வட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இன்று பயன்படுத்தி தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்தும் திட்டங்கள் குறித்த விபரங்களை அந்தந்த துறைவாரியாக மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களில் உள்ள தொடர்பு அலுவலர்களை கேட்டறிந்து பயன்படவும் கேட்டுக்கொண்டார். இன்று மொத்தம் 315 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைவாரியாக பெறப்பட்டுள்ளது.
113 பயனாளிகளுக்கு சுமார் 34 லட்சம் மதிப்பிற்கு திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை வேளாண்மை துறை தோட்டக்கலை சுகாதாரம் கால்நடை பராமரிப்பு சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை வாரியான திட்டங்களை கலந்து கொண்ட பொதுமக்களிடம் தெளிவாக விளக்கி கூறினார்.
மேற்கண்ட துறைகள் வாரியாக கருத்து கண்காட்சியும் அமைக்கப்பட்டு நேரடியாகவும் பொது மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் சங்கர் தலைமையில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா ஒருங்கினணப்புடன் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நமது பொதுமக்களுக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!
வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!
விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...