மாடு வளர்க்க தமிழ்நாடு அரசு வழங்கும் ஜாக்பாட் ரூ.1,20,000 பெறுவது எப்படி?


தமிழ்நாடு அரசு பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு உதவும் விதமாக கறவை மாடு வாங்குவதற்கான கடன் உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் நிதிநிலையை மேம்படுத்தும் வகையில் கறவை மாடு வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.1,20,000 வழங்குகிறது.



தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆவின் அல்லது மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் அல்லது எருமை வாங்க ரூ.1,20,000 வழங்கப்படும்.



கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் கடனை திரும்ப செலுத்துவதறக்கு 3 ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்படுகிறது. இதில் ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம், பயனாளியின் பங்கு 5 சதவீதமும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த திட்டத்தில் பயன் பெற பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் ஆகியோருக்கு ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும். மேலும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் கீழ் கண்ட இந்த ஆவணங்கள் சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும். 

1. ஆதார் அட்டை நகல்

2. குடும்ப அட்டை நகல்

3. கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் அட்டை நகல்

4. சாதி சான்றிதழ்

5. வருமானம் சான்றிதழ்

6. பிறப்பிடச் சான்றிதழ் 

மேலும் படிக்க....


PM Kisan 20வது தவணை முக்கிய அப்டேட்!! 20வது தவணை எப்போது கிடைக்கும்!!


இன்றைய வானிலை நிலவரம் என்ன? சென்னையில் கொட்டித் தீர்த்த மழை!!


கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி பண்ணை வைக்க மானியம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 



Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post