கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி பண்ணை வைக்க மானியம்!!
2025-26 ஆம் நிதி ஆண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 250 கோழிகள் கொண்ட 360 நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் அரசினால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு 10 கோழிப்பண்ணை செயல்படுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு மேற்படி திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 10 பயனாளிகளை தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று சென்னை-35, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
மாவட்ட ஆட்சியரிடமிருந்து ஒப்புதல் பெற்று அனுப்பி வைக்கப்படும் பயனாளிகள் பட்டியலிருந்து முன்னுரிமை அடிப்படையில் இயக்குநர் அவர்களால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார். பயனாளி தேர்வுக்குரிய தகுதியை நிர்ணயிக்கும் ஆவணங்கள் விவரம்.
மொத்த செலவினத்தில் 50 சதவீதம் மானியம் நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணைகளை நிறுவுவதற்கும், தேவையான கோழி கொட்டகை, கட்டுமானச் செலவு உபகரணங்கள் வாங்கும் செலவு, தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு, கோழி வளரும் வரை ஆகியவற்றிற்கான மொத்த செலவினத்தில் 50 சதவீதம் மானியம் ரூ.1.65,625 மாநில அரசால் வழங்கப்படும்.
திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள், மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.
பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது அவசியம்.
பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர். திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னிரிமை வழங்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
2022-23, 2023-24 மற்றும் 2024-25ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளோ அல்லது குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக் கூடாது. கட்டுமானப்பணிகள், தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1. ஆதார் அட்டை நகல்
2. பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல்
3. 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்)
4. 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி
5. 2022-23, 2023-24 (10) 2024-25 நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ்
மேற்படி திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையை / கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அதே கால்நடை மருத்துவமனை கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்திடுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
PM Kisan 20வது தவணை முக்கிய அப்டேட்!! 20வது தவணை எப்போது கிடைக்கும்!!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் கடன் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!!
விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ் - 100% மானியம், உடனே விண்ணப்பிக்கவும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...