விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு விவசாயிகள் விண்ணப்பிப்பது எப்படி!!
தமிழ்நாட்டில் வசிக்கும் நிலம் இல்லாத ஏழை எளிய விவசாய பெண்கள் விவசாய பெண் தொழிலாளர்கள் சொந்தமாக நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் கொடுக்கும். இந்த திட்டம் குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
2025-2026-ம் ஆண்டுக்கான கூட்டுறவு துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் அவர்கள் நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாய தொழிலாளர்கள் பொருளாதார நிலை மேம்படுத்த ஏதுவாக தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் "நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு கடன்" ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
21 வயது நிரம்பிய மற்றும் 55 வயதிற்கு உட்பட்ட ஏழை பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு கடன்கள் அனுமதிக்கப்படும். CIBIL மதிப்பெண் 675க்கு மேல் இருக்க வேண்டும். ஒருவரின் சொத்தின் மதிப்பில் 65% வரை, அதிகபட்ச கடன் தொகையாக ரூ.5,00,000/-(2 ஏக்கர் வரை மட்டுமே) வழங்கப்படும். கடன் தொகைக்கான கடன் உறுதி சான்று கடன் வாங்குபவரால் செயல்படுத்தப்பட வேண்டும்.
கடன் ஐந்தாண்டுகளுக்குள் திருப்பி செலுத்தப்பட வேண்டும். கடனுக்கான வட்டி விகிதம் 10%. வங்கிக் கடன் மூலமாக பெற்ற விவசாய நிலம் வங்கியின் பெயரில் அடமானம் வைக்கப்படும். கடன் வாங்கியவர் அசல் உரிமைப் பத்திரத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும், அடமான ஒப்பந்தம் கையெழுத்திட்ட பிறகு புதிய வில்லங்க சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் விண்ணப்பதாரர் வங்கியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு உத்திரவாதம் அளிப்பவர் அல்லது பிணையதாரரை அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மனுதாரர் மற்றும் பிணையதாரரின் ஆதார், ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு நகல், மூல ஆவணங்களுடனான நில உடைமை ஆவணங்கள், கடந்த 13 வருடங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ், பட்டா/சிட்டா/அடங்கல், சொத்து வரி ரசீது, நிலத்தை வாங்குவதற்கான விற்பனை ஒப்பந்தம் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவை மட்டும் இல்லமல், சொத்து உரிமையை நிரூபிப்பதற்கான வங்கியின் சட்ட ஆலோசகர் கருத்து, வங்கியின் மதிப்பீட்டாளரால் அளிக்கப்பட்ட சொத்தின் மதிப்பீடு. சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
வங்கியால் தேவையானதாக வரையறுக்கப்படும் அல்லது விதிக்கப்படும் மற்ற ஆவணங்கள்/ சான்றிதழ் போன்றவற்றை இணைக்கப்பட வேண்டும். முன் மொழியப்பட்ட நிலம் பாசன வசதி கொண்ட நிலமாக இருக்க வேண்டும். வாங்கப்படும் நிலம் பயிர் சாகுபடி செய்ய தகுதியுடைய நிலமாக இருப்பது அவசியம்.
கடனை திரும்ப செலுத்தும் காலம் வரை விளைவிக்கப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வது கட்டாயம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பெண் விவசாயத் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி கிளையினை அணுகி பயனடையுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்த திட்டம் தொடர்பான விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
மீன் பண்ணை வைத்திருப்போருக்கு ரூ.5000 மானியம் பெறும் சூப்பர் திட்டம்!
காரீப், சம்பா மற்றும் ராபி பருவங்களுக்கு பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!!
மன்னங்காடு கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த விவசாயிகள் பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...