மீன் பண்ணை வைத்திருப்போருக்கு ரூ.5000 மானியம் பெறும் சூப்பர் திட்டம்!  


மீன் பண்ணை வைத்திருப்போருக்கு, மானிய விலையில் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது இம்முறையும் 1 கோடி மீன் குஞ்சுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அறிவித்துள்ளனர் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.


மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மீன் பண்ணை அமைப்பதற்கு மற்றும் மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது மீன்வளத்துறை மூலம் இந்த மானியம் வழங்கப்படுகிறது.


மீன் மற்றும் இறால் மீன் மற்றும் இறால் உணவுப் பொருட்களான தேவை அதிகமாகவே உள்ளது. சமீபகாலங்களாகவே, வார இறுதிகளில் மீன் சந்தைகளில் பெருமளவு மக்கள் கூட்டம் அலை மோதும் நிலை உள்ளதால், இதனை பயன்படுத்தி, தொழில்முனைவோராக உயர விரும்புவோர், மீன் மற்றும் இறால் பண்ணைகளை அமைத்து நல்ல வருமானம் பெறலாம். 


இதற்காகவே, தமிழ்நாடு மீன்வளத்துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இறால் வளர்ப்பு முறையில் பயோபிளாக் (உயிர்க்கூழ்மம்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்பாடானது மிகவும் குறைவான தண்ணீரை பயன்படுத்தி அதிக அளவில் இறாலை வளர்க்க உதவுகிறது. திருவள்ளூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம்,  உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுப் பிரிவினருக்கு ரூ. 7.20 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்கள் போன்ற பிரிவினருக்கு ரூ. 10.80 லட்சம் மானியம் இறால் பண்ணை அமைக்க வழங்கப்படுகிறது.. இதுபோலவே மீன் பண்ணைகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.


உள்நாட்டு மீன்கள் இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, "தமிழகம் முழுவதும், உள்நாட்டு மீன்களை வளர்க்க விரும்புவோர், தங்கள் நிலங்களில் மீன் பண்ணை அமைத்தால், மீன்வளத் துறை சார்பில், மீன் குஞ்சுகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதன் வாயிலாக புதிய தொழில் முனைவோரை உருவாக்க அரசு திட்டமிடுகிறது.. அந்தவகையில், இந்த வருடம் மீன் பண்ணை அமைப்போருக்கு, 50 லட்சம் ரூபாயில், ஒரு கோடி மீன் குஞ்சுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை தவிர, தமிழகம் முழுதும் உள்ள 37 மாவட்டங்களில் செயல்பட்டு வரும், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ளவர்கள், தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து, அரசு திட்டங்களை பெற்று வருகின்றனர். மீன் வளர்ப்போர், மீன் குஞ்சுகளை கொள்முதல் செய்ய, அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. 


10000 மீன் குஞ்சுகள் அதிகபட்சமாக 10,000 மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய, 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. 1 ஏக்கரில் மீன் வளர்க்க விரும்புவோருக்கு, 3,000 மீன் குஞ்சுகள் வழங்கப்படும். மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை மற்றும் ரகத்தை பொறுத்து, அதன் விலை மாறுபடும். எட்டு மாதங்கள் வளர்த்த பின், அவற்றை நல்ல விலைக்கு விற்கலாம். 


இத்திட்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெற, அருகில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.. இந்த அறிவிப்பானது சுயதொழில் செய்யும் முடிவில் உள்ளோருக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.


மேலும் படிக்க....


தென்னை இயற்கை விவசாயிகள் குழுவிற்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்கோப் சான்றிதழ்!!


ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் 100% மானியத்தில் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள்!!


மன்னங்காடு கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்த விவசாயிகள் பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post