தரமான உளுந்து விதை பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு பயிற்சி!!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வேம்பங்குடி பைங்கால் கிராமத்தில் இன்று (10.7.2025) தரமான உளுந்து விதை பண்ணை அமைத்திட விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை தஞ்சாவூர் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) திருமதி S. மாலதி அவர்கள் துவங்கி வைத்து தலைமையுரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது தற்போது விவசாயிகள் அனைவரும் குறைந்த காலத்தில் நல்ல வருமானத்தை பெற வேண்டுமென்றால் அதற்கு உளுந்து விதைப்பண்ணை அமைத்திட கேட்டுக்கொண்டார்.
மேலும் பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி எஸ். ராணி அவர்கள் பேசுகையில் விதை பண்ணையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் விதைகள் மத்திய மற்றும் மாநில திட்டங்களில் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவும் உளுந்து மட்டும் அல்லாமல் நெல், கடலை, எள் என மற்ற பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுக கேட்டுக் கொண்டார்.
விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் உளுந்து பயிரில் விதை உற்பத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்பங்கள் , இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல், மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் , உளுந்து பயிருக்கு தேவையான இலை வழி உரத்தெளிப்பு முறைகள், உளுந்து பூக்கும் பருவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவாக விளக்கினார்.
விதை பண்ணைகள் அமைக்க பருவம் வாரியான ரகங்கள் தேர்வு செய்யும் முறை , உளுந்து விதை நேர்த்தி, மேட்டுப்பாத்தி அமைத்து விதைக்கும் முறைகள் குறித்தும் தெளிவாக விளக்கியதுடன் உளுந்து பயிரில் விதை பண்ணை அமைத்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறியதுடன் அதிக அளவில் விவசாயிகள் ஆர்வத்துடன் விதை பண்ணைகள் அமைக்க விதை சான்றிப்புத் துறையினை அனுகுமாறு பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இப்பயிற்சியில் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முனைவர். முத்துக்குமரன் (பூச்சியியல் துறை), முனைவர் . சுருளிராஜன் (நோயியியல் துறை) ஆகியோர் தொழில்நுட்ப உரை வழங்கினார்கள்.
மேலும் சேதுபவாசத்திரம், வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) திருமதி சாந்தி மற்றும் பேராவூரணி , சேதுபாவா சத்திரம், பட்டுக்கோட்டை , மதுக்கூர் வட்டார வேளாண்மை அலுவலர், துணை வேளாண் அலுவலர், உதவி விதை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் இந்த வட்டார விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இப் பயிற்சியில் விதைச்சான்று அலுவலர் வெங்கடாசலம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பயிற்சியின் நிறைவாக விதை சான்று அலுவலர் திருமதி.சங்கீதா அவர்கள் நன்றியுரை கூறினார்.
தகவல் வெளியீடு
து.கோபாலகிருஷ்ணன்
விதை சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் தஞ்சாவூர்
மேலும் படிக்க....
மீன் பண்ணை வைத்திருப்போருக்கு ரூ.5000 மானியம் பெறும் சூப்பர் திட்டம்!
காரீப், சம்பா மற்றும் ராபி பருவங்களுக்கு பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!!
விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு விவசாயிகள் விண்ணப்பிப்பது எப்படி!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...