எளிமையான முறையில் மாடி தோட்டம் அமைக்க சில வழிமுறைகள், தேவையற்றற்ற பொருட்களை வைத்து சுலபமாக மாடி தோட்டம் அமைக்கலாம்!!
மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைப்பது மிகவும் கடினம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது மிக எளிதான ஒன்று ஆகும். வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கு வீட்டின் முன்னால் உள்ள இடமே போதுமானது.
அது தவிர நம்முடைய மாடிகளில் இடம் இருந்தால் அங்கும் நமக்கு பயனுள்ள காய்கறி, பழம், பூ, மற்றும் கீரை வகைகளை பயிரிடலாம். தோட்டம் அமைப்பதற்கு முன்னர், நீங்கள் தோட்டம் அமைக்கும் இடத்தில் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் (Sun light) கிடைக்கும் இடத்தையும், தோட்டத்தில் உள்ள உபரி நீர் வெளியேற வசதியான இடத்தையும் தேர்வு செய்வது அவசியமாகும். மாடித்தோட்டம் (Terrace garden) அமைக்க உங்கள் வீட்டில் உள்ள பழைய கேன்கள், மற்றும் கண்ணாடி பொருட்கள், மற்றும் பூந்தொட்டி போன்றவற்றை பயனப்டுத்தலாம்.
தேங்காய் நாரில் கீரை வளர்க்கும் முறை
ஒரு பாலிதீன் பையில் உங்களிடம் உள்ள தேங்காய் நாரை நன்றாக உதிர்த்து போட்டு விடவும். அல்லது கடைகளில் கிடைக்கும் தேங்காய் நார் கட்டிகளை வாங்கி அதே போல் உதிர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றோடு செம்மண் மற்றும் இயற்கை உரங்கள் (Organic Compost) கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் சுமார் 5 முதல் 10 தண்ணீர் சேர்க்கவும்.
பிறகு அவற்றை 7 முதல் 10 நாட்களுக்கு நுண்ணுயிர் பெருகும்படி ஓரிடத்தில் வைத்து விடவும். இப்போது நன்கு ஊறி, நுண்ணுயிர் பெருகியுள்ள தேங்காய் நாரை எடுத்து, அதில் 2 கிலோ தொழுஉரம், உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சண கொல்லிகளை தலா 10 கிராம் என்ற அளவில் கலந்து, அவற்றை நன்கு கிளறிவிட வேண்டும்.பின்னர் நீர் வெளியேறும் வகையில் அந்த பாலிதீன் பைக்கடியில் 4 துளைகள் இடவும்.
பின்னர் அவற்றில் கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி (Tomato)
பயிர்களையும், வெண்டை, முள்ளங்கி, காய்கறி செடிகள், அவரை மற்றும் கீரை வகைகளை நாற்று விட்டு நடவு
(Planting) செய்ய வேண்டும். செடியில் பூச்சிகள் தாக்காமல் இருக்க அவற்றுக்கு வேப்பம்புண்ணாக்கு, மற்றும் பூச்சி விரட்டிகளை அதன் மேல் தெளிக்கலாம். வேப்ப இலையை (Neem) காயவைத்து அரைத்து, செடிகளுக்கு அடி உரமாக கொடுக்கலாம்.
நிழல் இருப்பது நலம்
மாடித்தோட்டத்தில் நீளமான பாலிதீன் பைகளை விரித்து அதில் நாம் கலந்து வைத்து கலவைகளை இட்டு, சிறிய வரப்பு வரப்பாக அமைத்து, அதில் கீரை வகைளை பயிரிடலாம். வெளியில் காலங்களில் தோட்டம் அமைப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது செடிகளுக்கு நல்ல நிழல் கிடைக்கும் இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும். ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பைகளை நல்ல இடைவெளி விட்டு வைத்தால் மிகவும் நல்லது.
மண்ணில்லாமல் செடி வளர்க்கலாம்
நவீன விவசாயத்தின் பயனாக மண் இல்லாமல் செடி வளர்க்கும் தொழில்நுட்பம், கோவை அக்ரிஇன்டெக்ஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேரடி செயல் விளக்க பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது.
' 'ஹைட்ரோபோனிக்ஸ்' எனப்படும் இந்த முறையில் மண்ணை பயன்படுத்தாமல், செடியை வளர்க்கும் முறையை நேரடியாக செயல் விளக்கம் அளிக்கின்றனர். 'மரம், செடி வளர மண் தேவையில்லை' என்கின்றனர் இந்த புதிய முறையை அறிமுகம் செய்துள்ள நிறுவனத்தினர். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கூழாங்கற்களை, பிளாஸ்டிக் தொட்டிகளில் நிரப்பி அதில் செடியை வளர்க்கின்றனர்.
கூழாங்கற்களுக்கு கீழ் பிளாஸ்டிக் பக்கெட்டில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை தேவையானபோது, சிறிய மோட்டாரில் பம்ப் செய்து, ஈரப்படுத்திக் கொள்ளலாம். காற்றோட்டமுள்ள கூழாங்கற்களுக்கு இடையே, வேர்விட்டு செடிகள் வளர்க்கின்றன. இந்த முறையில், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, கீரைகளை பயிரிடலாம். வழக்கமான செடிகளை விட இவை இரண்டு மூன்று மடங்கு அதிகம் விளைச்சலைத்தரும் எனக் கூறுகின்றனர்.
ஆனால், இதற்கான இடுபொருட்கள், ஊட்டச்சத்துக்கள் போன்றவைகளை தனித்தனியாக தண்ணீருடன் கலந்து செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த முறையில், வீடுகளை அலங்கரிக்க, அறைகளுக்குள் தனித்தனி ரேக்குகள் அமைத்து, இந்த செடிகளை வளர்க்கலாம்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...