ஒரு குடும்பத்திற்கு 4 வெள்ளாடுகள் இலவசம்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்!!


மழை பொய்த்துவிடும் காலங்களில், விவசாயம் கைகொடுக்கத் தவறிவிடும். அத்தகைய காலங்களில், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைத்துத் தருபவை கால்நடை வளர்ப்பு.


வேலைவாய்ப்பு


அது மட்டுமல்ல, 50 விழுக்காட்டிற்கும் அதிகமான கிராமப்புற சிறு, குறு, பெரிய விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு கால்நடை வளர்ப்பு அதிக வேலைவாய்ப்பு தந்து வருமானத்தை இருமடங்காக்கும் ஒரு நல்ல தொழிலாகக் காணப்படுகிறது.



எதற்காக கால்நடைகள்?


இறைச்சி, பால்பொருட்கள், உரம், பாரம் தூக்க, வண்டி இழுக்க மற்றும் பல நோக்கங்களுக்காக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழகக் கால்நடைத்துறை சார்பில் பின்வரும் சிறப்புத் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


சிறப்புத் திட்டங்கள்


1. விலையில்லா வெள்ளாடுகள் / கறவை மாடுகள் வழங்கும் திட்டம்.


2. கோழி வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம்.


3. நோய் கட்டுப்படுத்தும் திட்டம்.


4. மாநில தீவன அபிவிருத்தி திட்டம்.


5. ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டம்.


6. கால்நடை பாதுகாப்பு திட்டம்.


7. சிறிய அளவிலான பால்பண்ணை அமைக்கும் திட்டம்.


இதில் முக்கியத் திட்டமான விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டமான, அரசின் இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து பார்ப்போம்.



ஒரு குடும்பத்திற்கு 4 வெள்ளாடுகள்


ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாண்புமிகு முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட திட்டம் விலையில்லா வெள்ளாடு வழங்கும் திட்டம் ஆகும். இந்தத்  திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும்.


திட்டத்தின் அம்சங்கள்


1. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பரம ஏழைகள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள்.


2. மகளிர் (பெண்கள்) மட்டும் தான் பயனாளிகளாக இருக்க வேண்டும்.


3. பயனாளிகள் அந்தக் குறிப்பிட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.


4. பயனாளிகள் கண்டிப்பாக நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்களாக இருக்க வேண்டும்.


5. பயனாளிகள் 18 வயது முதல் 58 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.


6. மேலும் பயனாளிகள் குடும்பத்தில் குறைந்த பட்சம் ஒருத்தர் 18 வயது முதல் 60 வயதிற்குள் இருந்திட வேண்டும்.


7. பயனளிகளிடம் தற்பொழுது பசு, செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் சொந்தமாக இருக்கக் கூடாது.



8. பயனாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ (கணவா, தந்தை, தாய், மாமனார், மகன், மகள், மருமகள், மருமகள் ஆகியோர்) மத்திய மற்றும் மாநில அரசிலோ அல்லது மத்திய, மாநில அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு மையங்களிலோ பணியிலிருக்க கூடாது அல்லது உள்ளுர் அமைப்புகளில் உறுப்பினராக இருத்தல் கூடாது.


9. பயனாளிகளில் குறைந்த பட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களாக இருக்க வேண்டும்.


10. மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


11. திருநங்கைகள் அந்த கிராமத்தில் வசிப்பவர்களாக இருந்து மேற்கண்ட தகுதிகள் இருந்தால் அவர்களும் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர்.


12. ஒரு வீட்டிற்கு நான்கு ஆடுகள் வழங்கப்படும்.


கிராம சபைக் கூட்டங்கள்


பயனாளிகள் தேர்விற்காக சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும். விண்ணப்பங்களை கிராம அளவிலான குழு உறுப்பினர்களிடமோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ அளிக்கலாம்.

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post