பால் பண்ணை அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு அரசு கொடுக்கும் ரூ.1.75 லட்சம் மானியம்!!
விவசாயத்தில்
கால் நடை வளர்ப்பு என்பது
பிரித்துப்பார்க்க முடியாத ஒன்று. விவசாயம் பொய்க்கும் காலத்தில் காலத்தில் கைகொடுக்கும் ஆபத்தாண்டவன் என்றால் அது பால் பண்ணைதான்.
ரூ.1.75 லட்சம் மானியம் (1.75 lakh Subsidy) விவசாயத்தின் ஆதரவுத் தொழிலான பால்பண்ணையைத் தொடங்க நினைப்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் விதமாகவும், மத்திய அரசு ரூ.7 லட்சம்
வரை கடன் வழங்குகிறது. இதில்
1.75 லட்சம் ரூபாய் மானியமும் கிடைக்கிறது. இந்த மானிய திட்டத்தின்
மூலம் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன்பெற்று
தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வழிவகை செய்யலாம்.
கால்நடைத்துறை
குறைந்த காலகட்டத்தில் அபரித வளர்ச்சி காணும் வேளாண் தொழில் என்றால் அது கால்நடைத்துறைதான். இதிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், மற்ற வேளாண் தொழில்களைக் காட்டிலும் மிகக் குறைவு. அதுவே இதன் சாதகமான அம்சம். மேலும் இதற்கான பராமரிப்பு தொகை மட்டுமே உங்களின் முதலீடு.
ரூ.7
லட்சம் வரைக் கடன்
கால்நடைத்துறை
மற்றும் பால் பண்ணைத் தொழிலை
ஊக்குவிக்கும் வகையில், கால்நடை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை கடந்த 2010ம் ஆண்டு முதல்
மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பால் பண்ணைத்
தொடங்குவோருக்கு 7 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் 1.75 லட்சம் ரூபாய் மானிமாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நிபந்தனை
குறைந்தபட்சம்
10 எருமை மாடுகள் அல்லது 10 பசு
மாடுகளுடன் பால்
பண்ணையைத் தொடங்க வேண்டியது விதி. பண்ணை தொடங்க விருப்பமுடையவர்கள் இந்தவிதியை முதலில் கடைபிடிக்க வேண்டும்.
ரூ.1.75
லட்சம் மானியம்
இதில்,
பொதுப்பிரிவினருக்கு 25
சதவீதம் அதாவது 1.75 லட்சம் ரூபாய் வரையும், பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் 33 சதவீதத் தொகையும், மானியமாக வழங்கப்படுகிறது.
திட்டத்தின்
அம்சம்
பால்
உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும், கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகவும், பால் பண்ணை தொடங்க
முன்வருவோருக்கு இந்த சலுகைகளை மத்திய
அரசு வழங்குகிறது. நபார்டு எனப்படும் (National Bank for
Agriculture and Rural Development) (NABARD) வங்கி
மூலம் கடன் வழங்கப்படும்.
மானியம்
பெறுவது எப்படி?
பால்
பண்ணை தொடங்குபவர்கள், அதற்கான ஆவணங்களை ஒப்படைத்து, இந்தத் திட்டத்தின் கீழ், நபார்டு வங்கி மூலம் கடன் பெறலாம். பின்னர்
அவர்களுக்கு கிடைக்கவேண்டிய மானியத்தை, மத்திய அரசு நேரடியாக வங்கிகளுக்கு
அனுப்பி வைக்கும். இந்த தொகையை வங்கி,
உங்களது வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொள்ளும்.
பிற
வங்கிகள்
நபார்டு
வங்கி தவிர, வர்த்தக வங்கிகள், மண்டல வங்கிகள், மாநில- கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கிகளிலும், இந்த திட்டத்தின் மூலம்
கால்நடை தொழில் முனைவோர் கடன் பெறலாம். நபார்டு
வங்கியின் மூலம் நிதியதவி பெறத் தகுதிபெற்ற, பிற நிதி நிறுவனங்களிலும்
இந்தக் கடனை மத்திய அரசு
வழங்குகிறது.
ஆவணங்கள்
1. அடையாளச்
சான்று
2. ஜாதிச்
சான்றிதழ்
3. தொழிலுக்கான
திட்ட ஆவணங்கள்
4. ஒரு
லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற
விரும்புவோர், தங்கள் நில ஆவணங்களைச் சமர்ப்பிக்க
வேண்டியது அவசியம். உங்கள் நிலத்தின் பட்டா போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...