வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தமிழக அரசு அதிரடி

இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு

நீண்ட காலமாக, மத்திய, மாநில அரசுகளிடம், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். தற்போது, இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுள்ளது.

இதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. தி.மு.., தேர்தல் அறிக்கையில் கூறியது போல, நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம் என்று கூறாமல், முதல் பட்ஜெட்டிலேயே அறிவிக்க வேண்டும்.


தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நாட்டில், 60 சதவீத மக்கள், விவசாயத்தை சார்ந்து உள்ளனர். ஆனால், பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு, 2.50 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தனி பட்ஜெட் போட்டால், வேளாண் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என, தெரிய வரும். தனி பட்ஜெட்டில், பல்வேறு புதிய வேளாண் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம்

'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போடப்படும்' என்ற வாக்குறுதியை, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சொன்னபடியே, வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இன்றைய சூழ்நிலையில், உற்பத்தி செய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. பல விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

இதற்கென, வேளாண் திட்டங்களை வரைவு செய்வதற்கு தனிக் குழு அமைக்க வேண்டும். இதில், அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் மட்டுமின்றி, விவசாயிகளும் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும். இந்த குழு பரிந்துரைகளை ஏற்று, அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post